ETV Bharat / state

கல்குவாரி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

author img

By

Published : Feb 4, 2021, 12:00 PM IST

Updated : Feb 4, 2021, 1:53 PM IST

காஞ்சிபுரம்: மதூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கல் சரிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Kanchipuram stone quarry accident one death
Kanchipuram stone quarry accident one death

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மதூர் கிராமத்தில் இயங்கிவருகிறது ஆறு படையப்பா கல்குவாரி. இங்குள்ள 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் லாரிகள் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் பணியில் இருந்தனர்.

அப்போது மேலிருந்த மண், கற்கள் திடீரென சரிந்ததில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கல்குவாரி விபத்து
அதிக அளவில் கற்கள் சரிந்ததால் லாரிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் ஆகியோர் வந்தனர். பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு வந்தன.
கல்குவாரி விபத்து
மண்சரிவில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என உடன் பணிபுரிந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
Last Updated : Feb 4, 2021, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.