2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரயில்வே டிக்கெட்: பயணிகள் அதிர்ச்சி

author img

By

Published : Jan 18, 2022, 7:57 PM IST

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரயில்வே டிக்கேட்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே சீசன் டிக்கெட்டுகளும், சென்னை டிக்கெட்களும் வழங்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பது ரயில்வே பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு தினந்தோறும் பணிக்குச் செல்லும் பலர் அதிகளவில் ரயில் சேவையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் மாதத்துக்கு ஒரு முறை சீசன் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, பயணித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே தினந்தோறும் டிக்கெட் எடுத்துச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் ரயில்வே நிலையத்தில் தற்போது வரை சென்னைக்குச் செல்லும் ரயில் பயணிகள் தினந்தோறும் டிக்கெட் அல்லது மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்க வேண்டுமென்றால், கட்டாயம் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ்களை காண்பித்தால் மட்டுமே வழங்கப்படுமென தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரயில்வே டிக்கேட்
காஞ்சிபுரம் ரயில் நிலையம்

கரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மத்திய, மாநில அரசுகளும் பொதுமக்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தவில்லை எனப் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் ரயில் நிலையம்
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ரயில்வே டிக்கெட்

தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் ரயில்வே நிலையத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் என அறிவித்திருப்பது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக தென்னக ரயில்வே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்படும் என்பதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ரயில் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.