ETV Bharat / state

இதுதான் திராவிட மாடலா?: தாறுமாறாக விமர்சிக்கும் ஹெச்.ராஜா

author img

By

Published : Mar 11, 2022, 8:15 PM IST

ஹெச்.ராஜா பேட்டி
ஹெச்.ராஜா பேட்டி

திராவிட மாடல் குறித்து பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

காஞ்சிபுரம்: ஓரிக்கை பகுதியிலுள்ள மகா பெரியவரின் மணி மண்டபத்தில் காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் இன்று (மார்ச் 11) நடைபெற்ற மானனீய ஸ்ரீ எஸ்.வேதாந்தம்ஜி, ஸ்ரீ காளசாந்தி வைபவம் நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததைக் காணலாம்.

கேள்வி: காங்கிரஸ் விரும்பினால் எதிர்க்கட்சிகள் இணைந்து 2024 பொதுத்தேர்தலில் போட்டியிடலாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளாரே?

பதில்: காங்கிரஸ் கட்சி ஒரு பூஜ்ஜியம். பூஜ்ஜியத்தோடு எது சேர்ந்தாலும் மாற்றம் வரப் போகிறாதா, காங்கிரஸ் தற்போது தேசிய அளவில் பலவீனம் அடைந்துக்கொண்டே வருகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சனாதன இந்து தர்மத்தை வேர் அறுக்க திருமாவளவனோடு நான் கூட்டு வைக்கிறேன் என சொன்னார். அதனைக்கூட ராஜா வீடு வீடாக சென்று சொல்லட்டும் என அவர் சொன்னார். தற்போது அதனை சொன்னோம். உத்ரகாண்ட்டில் காலி. உத்தரப்பிரதேசத்திலும் வெறும் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆகையால், இந்து விரோத அரசியலை தேசிய கட்சிகள் கையாள முடியாது என்பதனை இந்த ஐந்து மாநில தேர்தல் நமக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. இத்தாலிய சோனியா காந்தியை தலைமையாக கொண்டுள்ள காங்கிரஸ், நாடு முழுவதும் இந்து விரோத கொள்கைகளை கடைபிடிக்கின்றார்கள் என்பதற்கு இங்கே கே.எஸ்.அழகிரி உதாரணம்.

ஹெச்.ராஜா பேட்டி

சனாதன இந்து தர்மம் வேர் அறுக்கப்படும் என்ற வார்த்தையை வெளிப்படையாக கே.எஸ்.அழகிரி பயன்படுத்தியுள்ளார். ஆகையால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வேர் அறுத்துள்ளனர்.

மம்தா காங்கிரஸ் உடன் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அது எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை.

கேள்வி: திராவிட மாடல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: (திராவிட மாடல் குறித்து பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்). ஒரே நாடு, ஒரே தேர்தல் தான் கடந்த 67 வரை நடந்தது. ஆகையால் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து அனைவரிடத்திலும் கலந்து பேசுவோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களுக்கும் நன்மை, நிர்வாகத்திற்கும் நன்மை.

கேள்வி: ஒரே நாடு, ஒரே தேர்தலின்போது தமிழ்நாட்டில் பாஜக சார்பில் யார் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவார்கள்?

பதில்: தேர்தல் வரும் போது அது குறித்து தெரிய வரும்.

இதையும் படிங்க: சிறையில் சொகுசு வழக்கு: சசிகலாவுக்கு ஜாமீன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.