ETV Bharat / state

மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை எதிர்கொள்ள  தயாரா ???? - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி..!

author img

By

Published : Oct 18, 2022, 8:13 AM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு இருக்குமானால் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த தயாரா என்று திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேச பேச்சு
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேச பேச்சு

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் பொன் விழா மற்றும் 51ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அதைதொடர்ந்து அவர் சிறப்புரையாற்றுகையில் ”எடப்பாடியார் சிங்கம் போல் தலைமை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேச பேச்சு

எடப்பாடியாரை அழிக்க வேண்டும். ஒழிக்க வேண்டும் என்பதற்காக மு.க.ஸ்டாலின் போடுகின்ற திட்டங்களுக்கு, ஆடுகளுக்கு காட்டுகின்ற பச்சை புல்லைப்போல இறையாகி கொண்டிருக்கிறார் நம்முடைய துரோகி. நான் பெயர் சொல்ல விரும்பவில்லை, அவர் மிக கேவலமாக அரசியலை நடத்தி கொண்டிருக்கிறார், எங்களுக்கெல்லாம் சீனியராக அவர் இருக்கின்றார். அவர்கள் எல்லாம் எப்படி அதிமுகவிற்கு வந்தார்கள் என அந்த பகுதியினருக்கு தெரியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் என இருக்கின்றோம்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேச பேச்சு
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேச பேச்சு

ஆனால், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே நிச்சயமாக வெல்லும். அதில் மாற்று கருத்து கிடையாது. இன்றைக்கும் எந்த வித நன்மைகளும் மக்களுக்கும் செய்யாமல் ஏமாற்று வழியில் ஏமாற்றி தினசரி ஒரு வேடம், ஒரு புகைப்படத்தை எடுத்து ஏமாற்றி விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கலாம் என்றால் அது பகல் கனவு.

நம்முடைய எடப்பாடியார் சொல்லுவதை போல வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் சட்டமன்ற தேர்தலும் வரும். அப்போது நிச்சயமாக அதிமுக ஆட்சி அமைப்பதை எந்த கொம்பாதி கொம்பனாலும் தடுக்க முடியாது. எப்படியாவது சட்டத்தில் புகுந்து நம்மை அழித்து விடலாம் என நினைத்துக்கொண்டு, சட்டசபையில் நம்மை வராமல் செய்து விடலாம் என்று பார்க்கிறார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு இருக்குமானால் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த தயாரா ? அப்படி தேர்தல் வந்தால் திமுக தலைவரின் தந்தை கருணாநிதி இருந்ததை போல இரண்டு முறை எதிர்கட்சி தலைவர் எந்த அந்தஸ்தை கூட இல்லாமல் செய்த எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் போல எடப்பாடியார் ஓட ஓட விரட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் கொதித்துக்கொண்டு இருக்கின்றார்கள். நாம் ஏமாந்து விட்டோம், ஓட்டை மாற்றி போடு விட்டோம். இனிமேல் எந்த தவறை நாங்கக் செய்ய மாட்டோம் என மக்கள் சொல்லுகின்றனர். வருகிற தேர்தலில் அது எந்த தேர்தலாக இருந்தாலும் சரி, நம்முடைய ஜென்ம விரோதி திமுகவை ஒழிப்புது தான் நம்முடைய கடமை என்பதனை நீங்கள் முடிவில் கொள்ள வேண்டும்.

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேச பேச்சு
d முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆவேச பேச்சு

திமுகவிற்கு துணை போகின்ற நம்மோடு இருந்த துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களை எள்ளி நகையாடி ஒதுக்கி வைக்க வேண்டும்” எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் நடிகை பபிதா, அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.பழனி, மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட பொருளாளர் வி.வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ் சோமசுந்தரம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,மாநகர, நகர,பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ். தரப்பில் 4 எம்எல்ஏ தான் இருக்காங்க... ஜெயக்குமார் ஆவேச பேச்சு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.