கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இந்நிலையில், மாணவியின் உடல் 2 முறை உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்ய நீதிமன்றம், ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.
மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கையையும் கடந்த 1ம் தேதி ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்து விழுப்புரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கையாக ஜிப்மர் மருத்துவ குழு தாக்கல் செய்துள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி உடன் பயின்ற இரு மாணவிகள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் நீதிபதியின் முன் மாணவிகள் இருவரும் வாக்குமூலம் அளித்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் தமிழில் பெயர் எழுதினால் தமிழ் முன்னெழுத்து initial கட்டாயம்... பள்ளிக்கல்வித்துறை