ETV Bharat / state

மழைக் காலத்தில் தொற்றுப் பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவ‌சிய‌ம்!

author img

By

Published : Sep 12, 2020, 2:42 PM IST

கள்ளக்குறிச்சி: மழைக் காலங்களில் கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளதால் அதனைத் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டு கொண்டுள்ளார்.

Police
Police

கள்ளக்குறிச்சியின் நகரப் பகுதியில் உள்ள ரோட்டரி கிளப் மண்டபத்தில் தூய்மைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "மழைக் காலங்களில் கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளதால் அதனைத் தடுக்க மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
குப்பைகளை தேவையற்ற இடங்களில் கொட்டக்கூடாது. தூய்மை உள்ள இடமே கடவுள் இருப்பார் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் இடத்தினையும் நம்மை சுற்றியுள்ள இடங்களையும் நாம் தாம் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஆலயங்கள் எப்படி உள்ளதோ அதேபோல் நமது வீடு உள்ளிட்ட இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி முக்கிய சாலைகளான தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், சேலம் சாலையோர குப்பைகளை கொட்டக் கூடாது, முகக்கவசம் உள்ளிட்டவை சாலையோரத்தில் வீசிவிட்டு செல்லக்கூடாது”எனப் பேசினார்.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் பாரதி, உள்ளிட்டோர் கலந்துகொண்டார் .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.