ETV Bharat / state

நாய்கள் கடித்து தண்ணீர் தேடிவந்த மான் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 24, 2020, 3:59 PM IST

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் காப்புக் காட்டிலிருந்து தண்ணீர் தேடி வந்த மானை, நாய்கள் கடித்ததால் உயிரிழந்தது.

தண்ணீர் தேடிவந்த மானை நாய்கள் கடித்ததால் உயிரிழப்பு!
தண்ணீர் தேடிவந்த மானை நாய்கள் கடித்ததால் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் காப்புக்காடு பகுதியில் மான்கள் அதிகம் காணப்படுகின்றன. இவை கோடை காலத்தில் தண்ணீர் கிடைக்காததால் அருகிலுள்ள கிராமங்களுக்கு வந்து அங்கிருக்கும் தண்ணீரை குடித்துச் செல்வது வழக்கம்.

அதே போல் இன்று (ஜூன் 24) அதிகாலை 6 மணியளவில் தண்ணீர் தேடி ஊர் பகுதிக்குள் வந்த மானை, நாய்கள் சுற்றி வளைத்துள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க முடியாத மான் கடிபட்டு வேலியோரத்தில் சிக்கிக் கிடந்தது.

இதை பார்த்த ஊர் இளைஞர்கள் விரைந்து வந்து மானை மீட்டு தண்ணீர் கொடுத்து முதல் உதவி சிகிச்சை வழங்கினர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அந்த மான் உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த வன அலுவலர்கள் விரைந்து வந்து மானை மீட்டு பரிசோதனை செய்து நல்லடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க...காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - ஜெயராஜ் மனைவி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.