ETV Bharat / state

காட்டு யானைகள் முகாம் - வாகன ஓட்டிகள் அச்சம்

author img

By

Published : Oct 10, 2019, 11:09 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பண்ணாரி சோதனைச்சாவடியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் முகாம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தடுப்புக்கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் முகாம்

தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கரும்புகள் ஏற்றிவரும் லாரிகள் இந்த தடுப்புக்கம்பி பகுதியில் நுழையும்போது கரும்புத்துண்டுகள் சிதறி கீழே விழுகின்றன. இவை அப்பகுதியில் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. கரும்பின் சுவையறிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தைவிட்டு வெளியேறி சோதனைச்சாவடிக்கு வந்து கரும்புகளை சுவைக்கின்றன.

இந்நிலையில் இன்று மதியம் வனத்தை விட்டு வந்த 2 காட்டு யானைகள் சோதனைச்சாவடி அருகே வந்து கரும்புகளைத் தின்றன. இதைக்கண்ட வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயற்சித்தனர். இருப்பினும் யானைகள் கரும்பை தின்பதில் ஆர்வம் காட்டியதோடு நகராமல் நின்றன. நீண்ட போராட்டத்திற்கு பின் யானைகள் அடர்வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது. பட்டப்பகலில் யானைகள் சோதனைச்சாவடியில் முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிப் பெண், 8 வயது சிறுவன், கணவர் உட்பட மூவர் கொடூர கொலை - கேள்வி எழுப்பும் இணையவாசிகள்!

Intro:Body:tn_erd_06_sathy_check_post_elephant_vis_tn10009

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே முகாமிட்ட காட்டு யானைகள். வாகன ஓட்டிகள் அச்சம்

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே யானைகள் முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிய தடுப்புக்கம்பி அமைக்கப்பட்டுள்ளது. தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள் இந்த தடுப்புக்கம்பி பகுதியில் நுழையும்போது லாரியில் உள்ள கரும்புத்துண்டுகள் சிதறி கிழே விழுந்து அப்பகுதியில் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. கரும்பின் சுவை அறிந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி சோதனைச்சாவடிக்கு வந்து கரும்புகளை சுவைத்து தின்கின்றன. இந்நிலையில் இன்று மதியம் வனத்தை விட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த 2 யானைகள் சோதனைச்சாவடி அருகே வந்து கரும்புகளை தின்றன. இதைக்கண்ட வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்கு விரட்ட முயற்சித்தனர். இருப்பினும் யானைகள் கரும்பை தின்பதில் ஆர்வம் காட்டியதோடு நகராமல் நின்றன. நீண்ட போராட்டத்திற்கு பின் யானைகள் அடர்வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது. பட்டப்பகலில் யானைகள் சோதனைச்சாவடியில் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.