ETV Bharat / state

ஈரோட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு..எஸ்பி ஆபிஸில் புகார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 8:32 PM IST

ஈரோட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு..எஸ்பி ஆபிஸில் புகார்
ஈரோட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு..எஸ்பி ஆபிஸில் புகார்

ஈரோடு அருகே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், சந்தேக மரணம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் சட்டவிரோதமாக நடந்துவரும் போதை ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையைக் கண்டித்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும்; ஆகவே, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள் மாவட்ட காவல கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஈரோட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்

ஈரோடு: ஈரோடு அருகே மரப்பாலம் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் அப்பகுதியில் சடலமாகச் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் போதை ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து கேள்வி எழுப்பியதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோட்டில் பெருபள்ளம் ஓடையில் சடலமாகக் கிடந்த மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.15) புகார் கொடுத்துள்ளனர். ஊசி உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து கேள்வி எழுப்பியதால், விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் கொலை செய்திருக்கக்கூடும் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மரப்பாலம் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டை வெளியே சென்றவர், இரு தினங்களுக்குப் பிறகு அதே பகுதியில் உள்ள பெருபள்ளம் ஓடை பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தலையில் பின் பகுதியில் காயங்களுடன் இவரைச் சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர் ஈரோடு நகர போலீசாரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

இதையடுத்து சடலத்தைப் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். ஈரோடு நகர போலீசார் இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, மணிகண்டன் தாய் ராஜாத்தி, சகோதரி விஜயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி அமைப்பினரும் இணைந்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

அப்போது, மரப்பாலம் பகுதியில் உள்ள வீதிகளில் கஞ்சா உள்ளிட்ட ஊசி சார்ந்த போதைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதை விரும்பாத மணிகண்டன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்த நபர்களிடம் விற்பனை செய்யக்கூடாது எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் விற்பனை செய்யும் கும்பல் மணிகண்டனைத் தாக்கி கொலை செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் தனது மகனைக் கொலை செய்து சாக்கடை கால்வாயில் போட்டு இருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாகக் கூறிய அவரது குடும்பத்தினர் சந்தேகத்திற்குரிய நபர்களை அழைத்து விசாரணை நடத்தி மகனின் இறப்புக்கு உரிய நீதி கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கோபி, 'மணிகண்டன் அப்பகுதி இளைஞர்கள் மத்தியில் நடக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுப்பதற்காக ஒரு முறை முயன்றதாகவும், அப்போது அவரை பூபதி வள்ளுவன், சீனி, சிவராமன் ஆகியோர் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க முயன்றதாக மணிகண்டனைப் பாட்டிலால் தாக்கினர். இது தொடர்பாக வழக்கு ஏற்கனவே, சூரம்பட்டி காவல்நிலையத்தில் உள்ளது. அப்போதே, சீனி என்பவர் மணிகண்டனை அரசு மருத்துவமனைக்குள் அரிவாளுடன் சென்று தாக்க முயன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

இது போன்ற சூழ்நிலையில், மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் இது சந்தேக மரணம் இல்லை. ஆகவே, இதனை விரிவாக விசாரணை செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதோடு, ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீண்ட காலமாக நடக்கும் போதைப்பொருட்கள் விற்பனையை அரசு தலையிட்டு உடனே தடுக்க வேண்டும்' எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை குற்றச்செய்திகள்: சிறையில் இருக்கும் இளைஞரை 3 ஆண்டுகளாகத் தேடிய போலீசார்..! மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.