ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணி தீவிரம்

author img

By

Published : Jul 15, 2020, 11:38 PM IST

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம்
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் தீவிரமாக வழங்கப்படுகின்றன. மேலும் புத்தகங்களை மாணவர்கள் வாங்கிச் செல்வதற்கு முன்பாக வகுப்பு வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு அந்தந்த வகுக்கப்பட்ட நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து தகுந்த இடைவெளியுடன் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். இதுபோன்று கணினி வழி பாடங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் மடிக்கணினி மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், குண்டடம், முலனூர், அலங்கியம் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்து, பாட புத்தகங்களை வாங்கி சென்றனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கல்வி மாவட்டங்களில் 1 முதல் 5ஆம் வகுப்புவரை படிக்கும் 34,650 மாணவ, மாணவிகளுக்கும், 6 முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் 56,813 மாணவ, மாணவிகளுக்கும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 18,641 பேருக்கும் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் பணி இன்று தொடங்கியது. மயிலாடுதுறையில் உள்ள செயின்ட் பால்ஸ் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 205 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே பாட வகுப்புகளை அறிந்து கற்றுக்கொள்ளும் வகையில் அரசின் சார்பில் வழங்கப்பட்ட இலவச மடிக்கணினியில் பாடங்களை பதிவேற்றம் செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே எவ்வித இணையதள இணைப்போ அல்லது கேபிள் இணைப்போ இல்லாமல் பாடங்களை கற்றுக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டது.

ஈரோடு

ஈரோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளுக்குமான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதேபோல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு அவர்களது மடிக்கணினியில் ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளும் பதிவிறக்கி வழங்கப்பட்டது.

மடிக்கணினியில் மென்பொருள் இறக்கி வழங்கப்பட்டதுடன் மாணவியர்களுக்கு அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் ஆசிரியர்கள் விளக்கிக் கூறினர். இதற்காக மாணவியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புத்தகங்களையும், மடிக்கணினிகளில் மென்பொருளை இறக்கும் பணியையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

கரூர்

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் நகராட்சி இனாம் கரூர் நகராட்சி தாந்தோணி நகராட்சி குளித்தலை நகராட்சி உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அரசு பள்ளி மற்றும் அரசு அனுமதி பெற்று இயங்கும் தனியார் பள்ளிகள் உட்பட அதில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் விலையில்லா நோட்டுகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 'கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்'

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.