ETV Bharat / state

திடீரென உயர்த்தப்பட்ட தனியார் பேருந்து கட்டணம்.. பயணிகள் அவதி!

author img

By

Published : Aug 12, 2023, 10:53 PM IST

sudden-hike-in-private-bus-fares-in-erode
திடிரென உயர்த்தபட்ட தனியார் பேருந்து கட்டணம் : பயணிகள் அதிர்ச்சி

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சிவகிரி, முத்தூர், வெள்ளகோவில், வழிதடத்தில் செல்லும் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

திடிரென உயர்த்தபட்ட தனியார் பேருந்து கட்டணம் : பயணிகள் அதிர்ச்சி

ஈரோடு: பேருந்து நிலையத்திலிருந்து சிவகிரி, முத்தூர், மூலனூர், வெள்ளகோவில் உள்ளிட்ட வழிதடங்களில் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இநிலையில் இந்த தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து சிவகிரிக்கு 18 ரூபாயும், முத்தூருக்கு 26 ரூபாயும், வெள்ளகோவிலுக்கு 31 ரூபாயும், மூலனூருக்கு 45 ரூபாயும் தமிழக அரசு தனியார் பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக பொதுமக்களிடம் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது.

ஈரோட்டில் இருந்து சிவகிரிக்கு 18 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும், முத்தூருக்கு 26 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாயும் வெள்ளகோவிலுக்கு 31 ரூபாய்க்கு பதிலாக 35 ரூபாயும், மூலநூறுக்கு 45 ரூபாய்க்கு பதிலாக 48 ரூபாயும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

பொதுமக்கள் அளித்த தகவலின்படி ஈரோடு பேருந்து நிலையத்தில் செய்தியாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற போது பேருந்து நடத்துனர்கள், சோதனை செய்தால் கண்டுபிடிக்க முடியாத படி பயணச்சீட்டு இயந்திரத்தில் உள்ள தகவல்களை அழிக்க பல மணி நேரம் போராடிய காட்சிகளை வெளியாகியுள்ளன.

சிவகிரி, முத்தூர், வெள்ளகோவில் மூலனூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு கூலி வேலைக்காக தினந்தோறும் வரும் பயணிகள் பேருந்தில் ஏறியதும் நடத்துனர் சொல்லும் தொகையை கொடுத்து பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக தங்களது வேலைக்குச் சென்று விடுகின்றனர்.

பொதுமக்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட ஏன் கூடுதலாக வசூல் செய்கிறீர்கள் என தனியார் பேருந்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பாததால், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்து வருவது தினசரி வாடிக்கையாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : மகளிர் உரிமைத் தொகை.. தகுதியான ஒரு மகளிர் கூட விடுபடக்கூடாது - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.