ETV Bharat / state

'மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும்' - கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை!

author img

By

Published : Jul 19, 2023, 10:42 PM IST

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன்

கிராமப்புறத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்களின் நலன் கருதி குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கோட்டுப்புள்ளம்பாளையம் ஊராட்சி அலிங்கியம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் நிதியிலிருந்து மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக அமைக்கப்பட்டிருந்த மேல்நிலைத் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

''அதிமுக ஆட்சியில் கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதலாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டன; தற்போது அந்தப் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்குச் செல்ல தேவையான பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. அரசு உடனடியாக மாணவர்கள் குறிப்பட்ட நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து அமைச்சரிடம் கேட்டால் தேவையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன எனக் கூறுகிறார். ஆனால், மாணவர்கள் சரியான நேரத்தில் வருவதில்லை, குறிப்பிட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மகளிருக்காக இயக்கப்படும் பேருந்துகளின் வழித்தடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதனை உடனடியாக அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். இதனை எதிர்க்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.

இதையும் படிங்க: சமூக அநீதியாக உள்ள நீட் தேர்வு: ரத்து செய்ய வலியுறுத்தி ராமதாஸ் அறிக்கை!

முன்னதாக கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதோடு, உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையெனில் சாதாரண மக்களின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும். டிஐஜி தற்கொலை விவகாரத்தில் மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்தும் சட்டப்பேரவையில் கண்டிப்பாக கேள்வி எழுப்பப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “மறுசுழற்சி கூட்டமைப்பு மற்றும் சிறு,குறு பஞ்சாலைகள் தமிழ்நாடு அரசிடம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும். இது தொடர்பாக நான் அறிக்கை கொடுத்து 12 நாட்களுக்கு மேலாகியும், திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து நாளை அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: டிஐஜி தற்கொலை விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வியெழுப்புவோம் - ஈபிஎஸ் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.