சிவாஜியின் தீவிர ரசிகராக மாறிய பள்ளி மாணவர்

author img

By

Published : Sep 27, 2021, 12:59 PM IST

Updated : Oct 1, 2021, 6:36 AM IST

பள்ளி மாணவர்

கோபிசெட்டிபாளையம் அருகே சிவாஜி நடித்த படங்களின் பெயர்களை வைத்து பள்ளி மாணவர் ஒருவர் சிறுகதை எழுதி அசத்திவருகிறார்.

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் எஸ்.பி. நகர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார்-வனிதா தம்பதி. இவர்களுக்கு பிரணவ், காண்டீவ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

காண்டீவ் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்புப் படித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததாலும், பகல் நேரங்களில் பெற்றோர் பணிக்குச் சென்றுவிடுவதாலும் தனது தாத்தா தணிகாசலத்தின் பராமரிப்பில் இருந்துவருகிறார்.

வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற காண்டீவின் தாத்தா தணிகாசலம், நாள்தோறும் காலையில் தனக்கு விருப்பமான நடிகர் சிவாஜியின் பாடல்களைக் கேட்டவாறே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து காண்டீவும் சிவாஜி பாடல்களைக் கேட்டுவந்துள்ளார்.

சிவாஜியின் தீவிர ரசிகராக மாறிய பள்ளி மாணவர்

சிவாஜி மீது ஈர்ப்பு

இதனால் அந்தச் சிறுவனுக்குச் சிவாஜி மீது ஈர்ப்புவந்து அவரது படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டார். அதிலும் குறிப்பாகச் சிவாஜி பேசிய வசனங்கள், பாடல்கள், அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் காண்டீவுக்குப் பிடித்துபோக, தாத்தாவிடம் சிவாஜி குறித்து கேட்டு தெரிந்துகொள்ளத் தொடங்கினார்.

சிவாஜி நடித்த 287 திரைப்படங்களின் பெயர்கள், அவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள், நடித்த படங்களின் வரிசை, அவரது குடும்ப வாழ்வு எனப் பல விஷயங்களை காண்டீவ் தெரிந்துகொண்டது மட்டுமின்றி சிவாஜியின் பாடல்களைப் பாடியும், வசனங்களைப் பேசியும் அசத்திவருகிறார்.

சிவாஜி படங்களின் பெயர் வைத்து சிறுகதை:

தொடர் விடுமுறையில் ஆன்லைன் விளையாட்டுகளில் தங்களது நேரத்தை வீணாக்கிவரும் மாணவர்கள் மத்தியில், சிவாஜியின் மீது ஆர்வம்கொண்டு அவரைப் பற்றிய புத்தகங்களையும் படித்துவருகிறார் பள்ளி மாணவர். மேலும் சிவாஜி நடித்த படங்களின் பெயர்களை வைத்தே சிறுகதைகளும் காண்டீவ் எழுதிவருகிறார்.

இந்தச் சிறுகதைகளைச் சிவாஜியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களிடம் காண்பிக்க வேண்டும் என தணிகாசலமிடம் மாணவர் கேட்க, அவரும் சிவாஜியின் மகனான பிரபுவிடம் அழைத்துச் செல்வதாக அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கோயில் நிலங்களுக்கான வாடகை குறித்து உயர் நீதிமன்றம் புது உத்தரவு

Last Updated :Oct 1, 2021, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.