ETV Bharat / state

காட்டுத் தீ: 50க்கும் அதிகமான கிரமாங்களில் மின்சேவை பாதிப்பு!

author img

By

Published : Mar 14, 2019, 9:27 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் ஆசனூர்-கேர்மாளம் சாலை அருகே ஏற்பட்ட காட்டுத் தீயால், அங்குள்ள 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் போக்குவரத்து, மின்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

File Phto_Wild Fire

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரிலிருந்து கேர்மாளம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. தற்போது கோடையின் வெப்பம் காரணமாக வனத்தில் செடி, கொடிகள் காய்ந்துக்கிடக்கின்றன.

இந்நிலையில், கேர்மாளம், காப்புக்காடு, கெத்தேசால், மாவள்ளம், கோட்டாரை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சாலையோர வனப்பகுதியில் பரவியது. இதனால் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த வனப்பகுதி வழியாக மலைகிராமங்களுக்கு மின்பாதை செல்கிறது. இந்த காட்டுத்தீயால் மின்கம்பி மற்றும் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், கெத்தேசால், பூதாளபுரம், காணக்கரை, காடட்டி, சுஜில்கரை, திங்களூர் பேன்ற 15க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால், மின்சாரம் இல்லாமல் மலைகிராமங்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் ஆசனூரிலிருந்து கேர்மாளம் வழியாக கொள்ளேகால் செல்லும் வழித்தடத்தில் பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரேப்பாளையத்தில் உள்ள வனச்சோதனைச்சாவடி மூடப்பட்டது.

மேலும், இன்று காலை முதலே இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கொள்ளேகால், கெத்தேலசால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டிருந்த போதிலும் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகின்றனர். தீ அணைக்கப்பட்ட வனப்பகுதியில் மின்கம்பம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இயல்பு நிலை திரும்புவதற்கு ஒரிரு நாட்கள் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

D.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

14.03.2019

 

கேர்மாளம் வனப்பகுதியில் காட்டு தீ

போக்குவரத்து துண்டிப்பால் பரிதவிக்கும் கேர்மாளம் கிராமமக்கள்

சாலை சீரமைப்பு, மின்கம்பம் சீரமைப்பு பணியில் சுணக்கம்

 TN_ERD_02_14_FOREST_FIRE_VIS_TN10009

VISUAL FTP இல் உள்ளது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியதால் சாலையின் இருபுறமும் புகை மண்டலமாக தீ பற்றி எரிவதால் வனத்துறையினர் வாகனப்போக்குவரத்துக்கு தடை விதித்தால் காலை முதல் 50க்கும் மேற்பட்ட மக்கள் ஊருக்கு திரும்பமுடியாமல் தவிக்கின்றனர்.

 


சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது.தற்போது கோடையின் வெப்பம் காரணமாக வனத்தில் செடி, கொடிகள் காய்ந்து சருகாகி போயின. இந்நிலையில் கேர்மாளம் காப்புக்காடு கெத்தேசால், மாவள்ளம், கோட்டாரை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ சாலையோர வனப்பகுதியில் பரவியது. இதனால் ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள், அரிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த வனப்பகுதி வழியாக மலைகிராங்களுக்கு மின்பாதை செல்கிறது. இந்த காட்டு தீயால் மின்கம்பி மற்றும் கம்பங்கள் சேதமடைந்தன. மின் வயர்கள் தீயில் கருகியதால்  கெத்தேசால், பூதாளபுரம், காணக்கரை, காடட்டி, சுஜில்கரை, திங்களூர் பேன்ற 15 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இல்லாமல்  மலைகிராமங்கள் அவதி பட்டுவருகின்றனர். காட்டு தீ வேகமாக பரவி வருவதால் ஆசனூரில் இருந்து கேர்மாளம் வழியாக கொள்ளேகால் செல்லும் வழித்தடத்தில் பேருந்து மற்றும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரேப்பாளையத்தில் வனச்சோதனைச்சாவடி மூடப்பட்டது.இன்று காலை முதலே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கொள்ளேகால், கெத்தேலசால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த மக்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருந்த போதிலும் தீயை அணைக்கு முடியாமல் திணறி வருகின்றனர். தீ அணைக்கப்பட்ட வனப்பகுதியில் மின்கம்பம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இயல்பு நிலை திரும்புவதற்கு ஒரிரு நாள்கள் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.