ஈரோடு அருகே மழையின்றி கருகும் பயிர்கள் - மழைவேண்டி கூழ் சமைத்து வழிபாடு

author img

By

Published : Sep 22, 2022, 10:34 PM IST

ஈரோடு அருகே மலைப்பகுதியில் மழையின்றி வாடி வதங்கும் மக்காச்சோளம்...!

ஈரோடு அருகே 25க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் நடப்பட்ட மக்காச்சோளப் பயிர் மழையில்லாமல் கருகும் நிலை உண்டாகியுள்ளது.

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர், கேர்மாளம், அருகியம், குரும்பூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் விவசாயிகள் மானாவாரி சாகுபடியை நம்பியுள்ளனர். கடந்த மாதம் பெய்த மழையால் நிலத்தை உழுது 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது.

தற்போது பயிர் வளர்ந்து வரும் நிலையில் மழையில்லாமல் வாடுகிறது. 3 மாதப்பயிரான ராகி, மக்காச்சோளம் மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகியம், குரும்பூர், கோம்பைத்தொட்டி கிராமமக்கள் மழை வேண்டியும் வாடும் பயிர்கள் செழித்து வளரவும் அருகியம் மாரியம்மனுக்கு சிறப்புப்பூஜை செய்து கோயிலில் ராகி கூழ் சமைத்தனர்.

ஈரோடு அருகே மழையின்றி கருகும் பயிர்கள் - மழைவேண்டி கூழ் சமைத்து வழிபாடு

பின்னர் பூஜிக்கப்பட்ட ராகி கூழ் பாத்திரத்தில் எடுத்து, பெண்கள் ஊர்வலமாக ஊரைச்சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு பிரசாதமாக வழங்கி வருணபகவானை வேண்டினர். மழையில்லாத நேரங்களில் ராகி கூழ் காய்ச்சி வழிபடுவது பாரம்பரியமாக நடந்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.