ETV Bharat / state

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ரூ.7,666-க்கு விற்பனை!

author img

By

Published : May 16, 2022, 6:24 PM IST

Updated : May 16, 2022, 6:57 PM IST

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ரூ.7666 க்கு விற்பனை!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ரூ.7666 க்கு விற்பனை!

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (திங்கள்கிழமை) விராலி மஞ்சள் ரூ.7,666க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. இந்த வரிசையில், திங்கள் கிழமையான இன்று மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

இவ்வாறு நடைபெற்ற மஞ்சள் விற்பனை ஏலத்தில், ஈரோடு மாவட்ட மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மட்டுமின்றி நாமக்கல், கரூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த மஞ்சள் விவசாயிகள் உற்பத்தி செய்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதன் ஏல விற்பனையில், வாரத்தின் முதல் நாளான இன்று விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ.7,666 க்கும், குறைந்தபட்ச விலை ரூ.5,769க்கும் சென்றது.

அதேபோல, கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக 6,501 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 5,255 ரூபாய்க்கும் சென்றது. இறுதியில் மொத்தமாக இன்று 1,016 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மலிவு விலையில் புதிய ஆப்பிள் டிவி - ஆப்பிள் நிறுவனம் திட்டம்?

Last Updated :May 16, 2022, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.