ETV Bharat / state

புதுமையான யுக்தியே விருதுபெறக் காரணம் - 'நல்லாசிரியர்' லலிதா

author img

By

Published : Aug 19, 2021, 10:50 AM IST

Updated : Aug 19, 2021, 12:22 PM IST

'நல்லாசிரியர்' லலிதா
'நல்லாசிரியர்' லலிதா

புதுமையான யுக்தியைக் கையாண்டு மாணவர்களுக்கு கல்வியைப் போதித்ததன் காரணமாகத்தான் நல்லாசிரியர் விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் தலைமை ஆசிரியை லலிதா தெரிவித்துள்ளார்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தான் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமையாகக் கருதுவதாக தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லலிதா தெரிவித்தார்.

ஆசிரியரின் நன்மதிப்பைக் கருத்தில்கொண்டு வழங்கிடும் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 18) மாலை வெளியிட்டது. அதில் 44 பேர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

15 ஆண்டுகாலப் பணிக்குப் பின் தலைமை ஆசிரியர்

இதில் தமிழ்நாட்டிலிருந்து திருச்சி மாவட்டம் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவிகளுடன் நல்லாசிரியர் லலிதா
மாணவிகளுடன் நல்லாசிரியர் லலிதா

இதில் தலைமையாசிரியர் லலிதா செய்தியாளர்களிடம் தான் வெற்றிபெற்றது குறித்து கூறுகையில், "தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நான் தேர்வாகியிருப்பது என்னைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இயற்பியல் துறையில் படிப்பை முடித்த பின்னர் 25 வயதில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பணியில் அமர்ந்தேன்.

'நல்லாசிரியர்' லலிதா
'நல்லாசிரியர்' லலிதா

திருமணத்திற்குப் பின்னர் கணவர் கல்வி பயின்ற ஈரோடு மாவட்டம் சிவகிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணி மாறுதல் பெற்று பணியில் அமர்ந்தேன். 15 ஆண்டுகாலப் பணிக்குப் பின்னர் 2019இல் தலைமை ஆசிரியையாக பவானிசாகர் தொட்டம் பள்ளியில் பணியில் அமர்ந்தேன்" என்றார்.

புதுமையான பங்களிப்பு குறித்த முயற்சிக்கு நல்லாசிரியர் விருது

பின்னர் பணி மாறுதல் பெற்று மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியையாகப் பணி செய்துவருகிறார். இந்த நிலையில் தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதுக்குத் தகுதிபெற ஆசிரியரின் சிறப்பான பங்களிப்பு என்ன என்பதையும் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியரின் புதுமையான முயற்சி என்ன என்பதையும் தேர்வுக் குழு ஆய்வுசெய்யும்.

'நல்லாசிரியர்' லலிதா
'நல்லாசிரியர்' லலிதா

அதில் ஆசிரியரின் புதுமையான பங்களிப்பு (innovative teaching strategies) குறித்த முயற்சிக்காக தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்றார். குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி அன்று மத்திய அரசு விருது வழங்குவது, நன்முறையில் பணியாற்றிய ஆசிரியர்களைச் சிறப்பிப்பதற்காகவே!

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களில் காணொலி வாயிலாக குடியரசுத் தலைவர் விருதினை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேசிய நல்லாசிரியர் விருது - தமிழ்நாடு ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு

Last Updated :Aug 19, 2021, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.