ETV Bharat / state

"விரைவில் ஆரம்ப சுகாதார நிலைய காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்" - அமைச்சர் மா.சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 6:52 PM IST

ஈரோட்டில்  புதிய மருத்துவ கட்டிடங்களின் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியம்
ஈரோட்டில் புதிய மருத்துவ கட்டிடங்களின் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியம்

ஈரோட்டில் நடைபெற்ற புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 10 சதவீத காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.

ஈரோட்டில் புதிய மருத்துவ கட்டிடங்களின் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணி

ஈரோடு: பவானி அருகே உள்ள காளிங்கராயன் பாளையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில், சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் தொடக்க விழா மற்றும் புதிய மருத்துவ கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 18வயது கீழ் நிரம்பிய ஆண் மற்றும் பெண்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று (நவ.22) தொடங்கப்பட்டுள்ளது. ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளும் கண்டறியப்பட்டு உள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் நான்கு நிலைகளின் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் இரண்டு நிலைகளில் நோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உலகில் ஜப்பான் நாட்டுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான்கு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், தலைமை மருத்துவமனை என ஆயிரத்து 397 மருத்துவ கட்டமைப்புகள் மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது.

அடுத்தாண்டு நிதிநிலை சீரமைப்பிற்குப் பின்னர் அவை தொடங்கப்படும். சேலம் அரசு மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சின்ன மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. மருத்துவ கழிவு எரிப்பது என்பது சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்த கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழையால் சளி, காய்ச்சல் பாதிப்பு கருதிதான் மாவட்ட ஆட்சியர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார்.

கிராமப்புற துணை சுகாதார நிலையத்தில் மகப்பேறு பார்க்கப்படுவதில்லை. துணை சுகாதார நிலையம் கிராமப்புற பகுதியில் இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10% காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதில் இருக்கும் 1,021 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.