ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே கஞ்சா வியாபாரி உட்பட 5 பேர் கைது!

author img

By

Published : Jun 27, 2019, 7:26 PM IST

போலி நிரூபர்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கஞ்சா வியாபாரி மற்றும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மரகதம் (50), கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இன்று காலை மரகதம் வீட்டிற்கு சென்ற ராஜபாண்டி, நாகராஜன், திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த மணிகண்டன், மோகன் ஆகிய 4 பேரும், தாங்கள் சென்னை தனிப்பிரிவு காவல்துறையினர் என்றும், பத்திரிகை நிருபர்கள் என்றும் கூறி, மரகதம் வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதனை வெளியே தெரிவிக்காமல் இருக்க 4 பேருக்கும் தலா ரூ 2,000 அளிக்க வேண்டுமெனவும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, மரகதம் அவரது சகோதரர் பழனிச்சாமி தரப்பினருக்கும், போலி நபர்களுக்குமிடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில், போலி நிருபர்கள் எனக் கூறி பணம் பறிக்க முயன்ற ராஜபாண்டி, நாகராஜன், திருமுருகன்பூண்டியை சேர்ந்த மணிகண்டன், மோகன் ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைக்கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கஞ்சா வியாபாரி மரகதம், அவரது சகோதரர் பழனிச்சாமி, மற்றும் போலி நிருபர்கள் எனக் கூறி பணம் பறிக்க முயன்ற மூவரை கைது செய்தனர். மேலும் நாகராஜன் தப்பியோடியதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிரூபர்களை நையப்புடைத்த கஞ்சா வியாபாரியின் தம்பி
Intro:கஞ்சா வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல். போலி நிருபர் உட்பட 3 பேர் கைது. ஒருவர் தப்பியோட்டம்Body:கஞ்சா வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டல். போலி நிருபர் உட்பட 3 பேர் கைது. ஒருவர் தப்பியோட்டம்





போதை பொருள் ஓழிப்பு நாளான இன்று கஞ்சா வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் போலி நிருபரை தாக்கியதாக கஞ்சா வியாபாரி மகரதம், பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.





சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் மேடு பகுதியை சேர்ந்த மரகதம் (50). கஞ்சா வியாபாரியான மரகதத்தின் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக வழக்குகள் உள்ளது. இந்நிலையில் மரகதம் வீட்டிற்கு 2 பைக்குகளில் 4 பேர் வந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். பின்னர் நாங்கள் சென்னை தனிப்பிரிவு போலீஸ் மற்றும் பத்திரிக்கை நிருப்ர்கள். உங்கள் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் சோதனையிட வந்துள்ளோம் எனக்கூறியபடி செல்போனில் வீட்டை புகைப்படம் எடுத்துள்ளனர். அதில் ஒரு நபர் ஆளுக்கு ரு.2 ஆயிரம் வீதம் பணம் கொடுத்தால் இந்த விஷயத்தை வெளியில் சொல்லமாட்டோம் என கூறியுள்ளார். அவ்வளவு பணம் இல்லை என மரகதம் கூறியுள்ளார். இதையடுத்து 4 நபர்களுக்கும் மரகதம், அவரது தம்பி பழனிச்சாமி தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் பைக்கில் வந்த 4 நபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதில் ஒருவன் தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து தகவலறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் பிடித்து விசாரித்தபோது திருப்பூரை சேர்ந்த கம்பீரம் மாத இதழ் நிருபர் ராஜபாண்டி, நாகராஜன், திருமுருகன்பூண்டியை சேர்ந்த மணிகண்டன், மோகன் என்பது தெரிய வந்தது. இதில் நாகராஜன் தப்பியோடி தலைமறைவானதால் இவர்கள் மீது மரகதம் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்நிலையில் ராஜபாண்டி உட்பட உடன் வந்த 4 பேரை தாக்கியதாக மரகதம், பழனிச்சாமி உட்பட 4 பேர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வியாபாரியிடம் பணம் கேட்டு போலிநிருபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப¬ ஏற்படுத்தியுள்ளது.



Conclusion:TN_ERD_03_27_SATHY_DUPLICATE_REPORTER_VIS_TN10009
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.