ETV Bharat / state

ஈரோட்டில் 4 நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

author img

By

Published : Feb 22, 2022, 4:58 PM IST

DMK won in Erode
DMK won in Erode

ஈரோடு மாவட்டத்தில் நான்கு நகராட்சிகளையும் திமுக கைப்பற்றிய நிலையில் திமுக ஆதரவாளர்கள் தாரைத்தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடிவருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் நான்கு நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

சத்தியமங்கலம் நகராட்சி

சத்தியமங்கலம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் திமுக 18, அதிமுக 4, பாஜக 2, பாமக 2, சுயேச்சை 1 இடங்களில் வெற்றிபெற்றன.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி

18 வார்டுகளில் திமுக 11, காங்கிரஸ் 2, அதிமுக 1, சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றிபெற்றன.

கோபிசெட்டிபாளையம்

கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் திமுக 14, காங்கிரஸ் 2, அதிமுக 13, சுயேச்சை 1 இடங்களில் வெற்றிபெற்றன.

4 நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

பவானி நகராட்சி

27 வார்டுகளில் திமுக 19, அதிமுக 5, சிபிஐ 2, சுயேச்சை 1 இடங்களில் வெற்றிபெற்றன.

வெற்றிபெற்ற திமுக வார்டு உறுப்பினர்கள் தனது ஆதரவாளர்களுடன் பட்டாசு வெடித்தும் தாரைத்தப்பட்டை முழங்கக் கொண்டாடினர்.

இதையும் படிங்க: முத்துநகர் மாநகரை முத்தமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.