ETV Bharat / state

புஞ்சை புளியம்பட்டி சந்தை - ரூ.1.50 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

author img

By

Published : Nov 10, 2022, 4:34 PM IST

ஈரோடு புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மொத்தம் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இந்த மாட்டுச் சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடு, மாடுகளை வாங்க வந்துள்ளனர்.

இன்று கூடிய சந்தைக்கு 40 எருமைகள், 250 கலப்பின மாடுகள், 100 கன்றுகள், 300 ஜெர்சி ரக மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். எருமைகள் 18 முதல் 35 ஆயிரம் ரூபாய் வரையும், கறுப்பு வெள்ளை மாடு 24 முதல் 42ஆயிரம் ரூபாய் வரையும், ஜெர்சி 22 ஆயிரம் முதல் 48 ஆயிரம் வரையும், சிந்து 16 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரையும், நாட்டுமாடு 72 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை ஆனது.

வளர்ப்பு கன்றுகள் 5ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 6ஆயிரத்து 500 ரூபாய் வரையும் 10 கிலோ எடையுள்ள செம்மறி ஆடுகள் 5ஆயிரத்து 500 ரூபாய் வரையும் விற்பனையானது.

கர்நாடக, கேரள மாநில வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச்சென்றனர். சந்தைக்குக்கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கால்நடை விலை 2ஆயிரம் ரூபாய் வரை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

புஞ்சை புளியம்பட்டி சந்தை - ரூ.1.50 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

இதையும் படிங்க: தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு ”ப்ளூ டிக்” சேவை நிறுத்தம்! டிவிட்டர் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.