ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறு குறித்து காவலர் ஏற்படுத்தும் விழிப்புணர்வு பரப்புரை!

author img

By

Published : Dec 17, 2019, 5:25 PM IST

police make bore well awareness in all over tamilnadu
மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்

ஈரோடு: ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரையை ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சிவாஜி என்பவர் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

இருசக்கர வாகனத்தில் ஒலிப்பெருக்கி அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டிருக்கும் அவர், கடந்த 25ஆம் தேதி கரூரில் ஆரம்பித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை ஆகிய பல்வேறு மாவட்டங்களைக் கடந்து இன்று ஈரோடு வந்தடைந்தார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓய்வுபெற்ற காவர்

ஒவ்வொரு மாவட்டமாக செல்லும் இவர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் , மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார். அதற்கு சான்றாக ஒவ்வொரு மாவட்ட அலுவலர்களிடமும் விழிப்புணர்வு கையெழுத்தினை பெற்று வருகிறார்.

மேலும், அந்த மாவட்டங்களுக்கு செல்லும் இவர் செல்லும் வழியெங்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் 6500 கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

செய்தியாளர்களை சந்தித்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சிவாஜி

இவர் ஓய்வுபெற்ற பிறகும் தனது உடலில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டாலும் இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்காட்ட உள்ளதாகவும், இந்த பரப்புரையின் மூலம் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை பற்றியும் நன்கு அறிந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக குப்பையை சேகரிக்கும் பொறியாளர்!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச17

ஆழ்துளை கிணறுகளால் உயிரிழப்பு - ஓய்வுபெற்ற காலவர் இருசக்கர வாகன பிரச்சாரம்!

ஆழ்துளை கிணறுகளின் மூலமாக குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளருக்கு ஈரோட்டில் மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சிவாஜி என்பவர் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இருசக்கர வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார். கடந்த 25ம் தேதி கரூரில் ஆரம்பித்த இந்த பயணம் திருச்சி, பெரம்பலூர்,அரியலூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கடந்து இன்று ஈரோடு வந்தடைந்தார்.

ஒவ்வொரு மாவட்டமும் செல்லும் இவர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். அதற்கு சான்றாக ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளிடமும் விழிப்புணர்வு கையெழுத்தினை பெருகிறார்.

மேலும் அந்த மாவட்டங்களுக்கு செல்லும் இவர் செல்லும் வழியெங்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகிறார். Body:மாநிலம் முழுவதும் 6500 கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ளும் இவர் தாம் ஓய்வுபெற்ற பிறகு உடலில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டாலும் இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்காட்ட உள்ளதாகவும் இதன் மூலம் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளை பற்றியும் நன்கு அறிந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Conclusion:தளராத வயதிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இவர் மேற்கொள்ளும் பிரச்சாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.