ETV Bharat / state

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்!

author img

By

Published : Dec 28, 2019, 3:25 PM IST

bhavanisagar dam
bhavanisagar dam

ஈரோடு: நெல் பயிருக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இதன் கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்த கீழ்பவானிசாகர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு முழுகொள்ளளவை எட்டியதால் கடந்த ஆகஸ்ட ஆறாம் தேதி கீழ்பவானி வாய்க்கால் நெல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு நீடிக்கும். இதன் மூலம் கருர், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 124 கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றனர். முதல் போக நெல் பயிருக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நிலக்கடலை, எள் பயிரிட புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.60 அடியாகவும், நீர் இருப்பு 32.4 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 564 கன அடியாகவும், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடிநீரும் வெளியேற்றப்படுகிறது.

இதையும் படிங்க:

ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு.

Intro:Body:tn_erd_02_sathy_bhavanisagar_dam_vis_tn10009

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தம்

சத்தியமங்கலம் அடுத்த கீழ்பவானிசாகர் அணையில் இருந்து 1 லட்சத்து 3500 எக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு முழுகொள்ள்ளவை எட்டியதால் கடந்த ஆகஸ்ட 6ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் நெல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு நீடிக்கும். இதன் மூலம் கருர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 124 கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகினறன. முதல் போக நெல் பயிருக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நிலக்கடலை மற்றும் எள் பயிரிட புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.60 அடியாகவும், நீர் இருப்பு 32.4 டிஎம்சி யாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 564 கன அடியாகவும் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடிநீரும் வெளியேற்றப்படுகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.