ETV Bharat / state

கரும்பு லாரியை எதிர்நோக்கி காத்திருந்த காட்டு யானை

author img

By

Published : Sep 11, 2022, 1:02 PM IST

elephant waiting for sugarcane truck  wild elephant  sugarcane truck  wild elephant near sathyamangalam  sathyamangalam  கரும்பு லாரியை எதிர்நோக்கி காத்திருந்த காட்டு யானை  கரும்பு லாரி  காட்டு யானை  திம்பம் மலைப்பாதை
காட்டு யானை

திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரியை எதிர்நோக்கி ஒற்றை காட்டு யானை காத்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தாமல் போகும்படி வனத்துறையினர் அறுவுறுத்தினர்.

ஈரோடு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள், திம்பம் வழியாக சத்தியமங்கலம் சர்க்கரை ஆலைக்குச் செல்வது வழக்கம். அவ்வப்போது அதிக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கரும்பு லாரி ஓட்டுநர்கள் சில கரும்புகட்டுகளை வனப்பகுதியில் வீசியெறிந்து செல்வர். இதைனை காட்டு யானைகள் சாப்பிட்டு பழகிவிட்டன. அதனாலேயே அடிக்கடி சாலைக்கு வரும் யானைகள் வாகனங்களை வேவு பார்த்து வருகின்றன.

அந்த வகையில் திம்பம் மலைப்பாதையின் 2ஆவது வளைவில் ஒற்றை யானை நின்று கொண்டு கரும்பு லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருந்தது. நீண்ட நேரமாக அங்கிருந்து போகாமல் அவ்வழியாக பயணிக்கும் லாரி, வேன் ஆகியவற்றை மறித்து கரும்பை தேடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பண்ணாரி வனச்சோதனைசாவடிக்கு வாகனவோட்டிகள் தகவல் தெரிவித்தனர்.

கரும்பு லாரியை எதிர்நோக்கி காத்திருந்த காட்டு யானை

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், போக்குவரத்தை சீர் செய்தனர். பின் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானை சுமார் 1 மணி நேரம் காத்திருந்த நிலையில் கரும்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தானாகவே திரும்பி சென்றது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் கடவுளுக்கு காணிக்கையாக நாக்கை அறுத்து நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.