ETV Bharat / state

வைகுண்ட ஏகாதசி: தமிழ்நாட்டு கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு!

author img

By

Published : Jan 6, 2020, 8:11 PM IST

வைகுண்ட ஏகாதசி: தமிழ்நாடுப் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசி: தமிழ்நாடுப் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும். இதற்காக பெருமாள் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் ஒரு பொழுது மட்டுமே உண்டு, விரதமிருந்து நாள் முழுவதும் கண்விழித்திருந்து, அதிகாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சொர்க்கவாசல் வழியாகச் சென்று இறைவனை தரிசிப்பது வழக்கம்.

இந்நிலையில், திண்டுக்கல் அருகேயுள்ள தாடிகொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு மார்கழி மாதத்தில் பகல் பத்து முடிந்து இரவு பத்து தொடங்கும் நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வரலாற்று சிறப்புடைய சாரங்கபாணி கோயில் உள்ளது. ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதி தலத்திற்கு அடுத்து மூன்றாவது தலமாக இந்த கோயிலில் ஏகாதசி விழா கோலகலமாக நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி தினத்தை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி: தமிழ்நாட்டு கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு!

தருமபுரி கோட்டை பரவாசுதேவர் கோயில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சைவத் திருத்தலமான திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சைவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு என்ற நிகழ்வு திருவண்ணாமலையில் மட்டும்தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

 Vaikuntha Ekadashi  #Sorkavasal open - part 2


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.