ETV Bharat / state

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தொடர் நடவடிக்கை - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

author img

By

Published : Jul 2, 2021, 6:52 AM IST

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து ஒன்றிய அரசிடம் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனவும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான அடக்கஸ்தலத்தை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று (ஜூலை 1) ஆய்வு செய்தனர்.

அப்போது, இஸ்லாமியர்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் இந்த இடத்தின் மண் வளம்‌குறைந்ததால், வளமான மண்ணை கொட்டி நிரப்பி கொடுக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வக்பு வாரிய சொத்துக்களை மீட்போம்

இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வக்பு வாரியத்திற்கு சொந்தமான வாடகை கட்டடங்களில் குடியிருப்பவர்களிடம் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை வசூல் செய்யவும், மிகக்குறைந்த வாடகை செலுத்தப்பட்டு வரும் இடங்கள் கண்டறியப்பட்டு வாடகையை உயர்த்தி வசூல் செய்து வகுப்புவாரி நிதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுகதான் தொடர் வலியுறுத்தல்

மேலும், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம், குடியுரிமைச்சட்டத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள நாடுகளில் இலங்கையையும் சேர்க்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஐஐடி வளாகத்தில் எரிந்த நிலையில் ஆராய்ச்சி மாணவனின் உடல் கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.