ETV Bharat / state

கொடைக்கானலில் மாமியார் - மருமகள் கோயில் பற்றிய தகவல்கள்

author img

By

Published : Aug 26, 2021, 8:34 PM IST

கொடைக்கானலில் மாமியார்-மருமகள் கோயில் பற்றிய தகவல்கள்
கொடைக்கானலில் மாமியார்-மருமகள் கோயில் பற்றிய தகவல்கள்

கொடைக்கானல் மலைப்பகுதி கிராமத்தில் அமைந்துள்ள மாமியார் - மருமகள் கோயிலைப் பற்றிக் காண்போம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்டு அட்டுவம்பட்டி என்ற கிராமம் உள்ளது.

இக்கிராமம் கொடைக்கானல் மலைக்கிராமங்களில் முக்கிய இடமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது.

கொடைக்கானல் மலைப்பகுதி
கொடைக்கானல் மலைப்பகுதி

மாமியார்-மருமகள் கோயில்

இந்த மலைக்கிராமத்தில் மக்களை வியப்படையச் செய்யும் வகையில் கோயில் ஒன்று உள்ளது. அட்டுவம்பட்டி கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்றால், இந்த விநோத கோயில் இருக்கிறது.

அதாவது பல ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டைவிட்டு கோபித்து வந்த மருமகளை சாந்தப்படுத்தி, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாமியார் வந்ததாகவும், அப்படியே அவர்கள் கல்லாக மாறி தற்போது, சாமியாக இருப்பதாகவும் அக்கோயிலின் தல வரலாற்றை அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

கொடைக்கானலில் மாமியார்-மருமகள் கோயில் பற்றிய தகவல்கள்

அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள், பெரும்பாலும் குடும்ப சண்டையில் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகிறார்கள். குறிப்பாக இந்தக் கோயிலுக்கு வந்துசென்றுவிட்டால், மாமியார்-மருமகள் பிரச்னை சற்று குறையும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

காவல் தெய்வமாக..

அதுமட்டுமல்லாது இந்தக் கோயிலைச் சுற்றி ஏராளமான விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் இருந்து வருகிறார்கள். அந்த விவசாயிகளும், இந்தக் கோயிலை தற்போது ஒரு காவல் தெய்வமாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, கொடைக்கானல், அட்டுவம்பட்டி மலைக் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை நம்மிடம் கூறுகையில், "நூறு ஆண்டுகளுக்கும்மேல் இந்த மாமியார் - மருமகள் கோயில் உள்ளது. மாமியார் - மருமகள் தெய்வமாக உருவான கதை என்னவென்றால், மருமகள் கோபித்துக்கொண்டு இவ்விடத்திற்கு வந்துவிட்டதால், மாமியார் சமாதானம் செய்து திரும்புகையில், இருவரும் தெய்வங்களாக மாறிவிட்டனராம்.

மாமியார்-மருமகள் கோயில்
மாமியார்-மருமகள் கோயில்

மேலும், இப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் மாமியார் - மருமகள் சண்டை வந்தால், அப்பிரச்னை தீர்வதற்காக இக்கோயிலில் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். இதனால் குடும்பப் பிரச்னைகளும் தீரும் என்பது மக்களின் ஐதீகம்.

மக்களின் நம்பிக்கை

இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை பூஜை நடைபெறும். பொங்கல் மட்டுமே வைத்து பூஜை நடத்துவதே மாமியார்-மருமகள் கோயிலின் சிறப்பாகும். கிடாவெட்டு போன்றவை இங்கு நடைபெறாது.

இப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கும், விவசாயிகளுக்கும் காவல் தெய்வமாக இத்தெய்வங்கள் விளங்குகின்றன. மேலும், மழை வரவில்லை என்றாலும் இங்கு வந்து மக்கள் வேண்டி செல்வர். மலைக் கிராம மக்கள் பிரச்னைகளை இக்கோயிலில் வேண்டினால் அது நிறைவடையும்" என்று கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை பூஜை
ஆண்டுக்கு ஒருமுறை பூஜை

மேலும், இக்கோயிலுக்கு வரும் வழியில் சாலைகள் பழுதடைந்து உள்ளதால், சாலைகளை சீரமைத்துத் தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: 'சருமத்தை மெருகூட்டும் வைட்டமின் ஈ!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.