ETV Bharat / state

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி கைதை கண்டித்து கொடைக்கானலில் கிறிஸ்தவர்கள் போராட்டம்

author img

By

Published : Oct 19, 2020, 7:18 AM IST

KODAIKANAL CHIRISTIAN PORATTAM
KODAIKANAL CHIRISTIAN PORATTAM

திண்டுக்கல்: பழங்குடி மக்களின் வாழ்வுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கைதானதை கண்டித்து கொடைக்கானலில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடிவரும் மனித உரிமை போராளி பாதிரியார் ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயல்பாட்டாளர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. ஜாமீனில் வெளிவரமுடியாத அளவில் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மத்திய அரசு சட்டவிரோதமாக அவர்களை கைது செய்துள்ளதாக கூறி இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று (அக். 18) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உகார் தேந‌க‌ர் ப‌குதியில் குழந்தை ஏசு ஆலயம் முன்மாக ஒன்று திரண்ட கிறிஸ்தவ மக்கள், ஸ்டேன் சுவாமி கைதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக இடைவெளியுட‌ன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட 16 பேரை விடுதலை செய்யக்கோரி கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதையும் படிங்க...களைகட்டிய நவராத்திரி: மந்தமாக இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.