ETV Bharat / state

அந்தோணியார் கோயில் திருவிழா: மாபெரும் ஜல்லிக்கட்டு

author img

By

Published : Feb 14, 2020, 6:31 PM IST

jallikattu in natham for St Antony festival
jallikattu in natham for St Antony festival

திண்டுக்கல்: நத்தம் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில் உத்திரிய மாதா அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து 700 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் உஷா தொடங்கிவைத்தார். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது அவை வீரர்களின் கையில் சிக்காமல் துள்ளிச் சென்றன.

இதைத்தொடர்ந்து காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. அதேபோல் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டன. தங்க காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா, ஃபேன், ஆட்டுக் குட்டிகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: 'அரசியல்வாதிகளுக்கு மேடை, எங்களுக்கு?'- மாற்றுத்திறனாளிகள் வேதனை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.