ETV Bharat / state

தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பெண்ணுக்கு ஒமைக்ரானா? பழனியில் பீதி

author img

By

Published : Dec 24, 2021, 1:46 PM IST

கரோனா
கரோனா

தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளதையடுத்து அவரது மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால் பழனியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து, பழனிக்கு கடந்த 16ஆம் தேதி 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது மனைவி, பிள்ளையுடன் வந்துள்ளார். விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சோதனையில் மூவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை வந்துள்ளது.

இந்நிலையில் பழனி சுகாதாரத் துறையினர் மூவரிடமும் நேற்று (டிசம்பர் 23) மாதிரிகள் சேகரித்தனர். இதில் இளம் பெண்ணிற்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பெண்ணுடன் தொடர்பிலிருந்த சுமார் 25 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

மேலும் கரோனா பாதிப்பிற்குள்ளான பெண்ணின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: உ.பி.யில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு: தமிழ்நாட்டிலும் ஊரடங்கா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.