ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு: போக்சோ ச‌ட்ட‌த்தின் கீழ் மூவர் கைது!

author img

By

Published : Jun 16, 2021, 1:34 PM IST

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த 3 நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பாலியல் வன்புணர்வு  போக்சோ ச‌ட்ட‌ம்  கொடைகானலில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  திண்டுக்கல் செய்திகள்  குற்றச் செய்திகள்  kodaikanal crime news  kodaikanal girl sexual harrasment  3 youths were arrested for sexual harrasment  sexual harrasment  dindigul news  dindigul latest news  crime news  pocso act  வ்
சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு: போக்சோ ச‌ட்ட‌த்தின் கீழ் மூவர் கைது!

திண்டுக்கல்: கொடைக்கானல் செண்பகனூர் பகுதியைச் சேர்ந்த, பத்தாம் வகுப்புப் படித்துவரும் மாணவி, தனது தந்தையுடன் வசித்துவருகிறார். இவரது தந்தைக்கு மாலைக்கண் நோய் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் அவர்களை பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் தனது தந்தையுடன், மாணவி தனிமையில் வசித்துவருகிறார். பார்வையில்லாத மாணவியின் தந்தையை வீட்டுக்குக் கூட்டி வந்து விடுவது போல் அவ்வப்போது அவரது மாமன் கண்ணன் வந்து செல்வார். மாணவியின் நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அடிக்கடி பாலியல் வன்புணர்வும் கொடுத்துள்ளார்.

இதேபோல் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், செண்பகனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய இருவரும், அவ்வப்போது மாணவியின் தந்தையை வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டுச் செல்வார்கள்.

அப்போது மாணவியின் தனிமையைப் பயன்படுத்திய இவர்களும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளனர். இதேபோல் கடந்த பல வாரங்களாக இவர்கள் தனித்தனியாக பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளனர். மேலும் மாணவியை மிரட்டியும் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன் 15) மாலை மாண‌வியின் அல‌ற‌ல் ச‌த்த‌ம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அக்க‌ம் ப‌க்க‌த்தின‌ர், இது குறித்து குழந்தைகள் நல அமைப்பிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர், கொடைக்கான‌ல் காவ‌ல் நிலைய‌த்தில் புகாரளித்த‌ன‌ர். அப்புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் காவ‌ல் துறையின‌ர் சம்பவ இடத்திற்குச் சென்று கண்ணன், மணிகண்டன், ராஜ்குமார், ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்து விசார‌ணை மேற்கொண்டுவ‌ருகின்ற‌ன‌ர்.

இதையும் படிங்க: பாலியல் புகார் முதல் கைப்பூட்டு வரை: சிவசங்கர் பாபா வழக்கு கடந்துவந்த பாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.