ETV Bharat / state

ஓரினசேர்க்கைக்கு அழைத்து இளைஞர் கொலை: மூவர் கைது

author img

By

Published : Jul 8, 2019, 10:10 AM IST

ஓரினசேர்க்கைக்கு அழைத்து இளைஞர் கொலை: மூவர் கைது.

தருமபுரி: ஓரினசோ்க்கைக்கு அழைத்து இளைஞரை கொலை செய்த மூவரை, தருமபுரி ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் சிவாடி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் பாதையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக தருமபுரி ரயில்வே காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காரிமங்கலதைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சசிக்குமார்(29) என தெரியவந்தது. இவர் வைத்திருந்த லேப்டாப், மொபைல் போன் ஆகியவை காணாமல் போனதால் உயிரிழப்பில் மர்மம் நிலவுவதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.


இதனையடுத்து சசிகுமார் இறப்பு தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சசிக்குமார் பயன்படுத்தி வந்த மொபைல் போன், ஈரோடு மாவட்டம் பவானியில் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. தொடர் விசாரணையில், பவானி குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(23) என்பவரிடம் அந்த மொபைல் போன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பின், அவரை பிடித்து போலீஸார் விசாராணை நடத்தினர். அப்போது, கடந்த மாதம் 24ஆம் தேதி ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரான விஜய் ராமசாமி, தருமபுரி மாவட்டம் இண்டூர் சென்றுள்ளார். அங்கு உறவினர்கள் சசிகுமார், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து காரிமங்கலத்தைச் சேர்ந்த சசிக்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

ஆனால், அதற்கு சசிக்குமார் மறுப்பு தெரிவித்ததால், அவரை தாக்கி ரயில் தண்டவாளத்தில் வைத்து மூவரும் கொலை செய்துள்ளனர்.

பின் அவரிடம் இருந்த லேப்டாப், மொபைல் போன் ஆகிய பொருட்களை திருடி மூவரும் தலைமறைவாகினர்.


இதையடுத்து சசிகுமார், கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்த ரயில்வே காவல்துறையினர், தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

ஓரினசேர்க்கைக்கு அழைத்து இளைஞர் கொலை: மூவர் கைது.
Intro:tn-dpi-01-homosex-murder3arrest_vis_7204444Body:tn-dpi-01-homosex-murder3arrest_vis_7204444Conclusion:தருமபுரி அருகே ஒரினசோ்க்கைக்கு அழைத்து கொலை கொலையாளிகள் 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.



தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சிவாடி ரயில் நிலையத்துக்கும் தருமபுரி ரயில் நிலையத்துக்கும் இடையே கடந்த மாதம் 25-ம் தேதி இளைஞர் ஒருவர் ரயில் பாதையில் உயிரிழந்து கிடந்தார். தருமபுரி ரயில்வே போலீஸார் விசாரணையில், காரிமங்கலம் வட்டம் மல்லிக்குட்டை அடுத்த நிம்மாங்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சசிக்குமார்(29) என தெரிய வந்தது. உயிரிழந்தவர் வைத்திருந்த லேப்டாப், மொபைல் போன் ஆகியவை காணாமல் போயிருந்ததால் உயிரிழப்பில் மர்மம் நிலவுவதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சசிகுமார் இறப்பு தொடர்பாக இரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சசிக்குமார் பயன்படுத்தி வந்த மொபைல் போன் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், பவானி குருப்ப நாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விஜய் ராமசாமி(23) என்பவரிடம் அந்த மொபைல் போன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை பிடித்து போலீஸார் விசாராணை நடத்தினர். அப்போது, கடந்த மாதம் 24-ம் தேதி ஓசூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான விஜய் ராமசாமி தருமபுரி மாவட்டம் இண்டூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், உறவினர்களான இண்டூர் அடுத்த மாரியம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து யாரையாவது ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்.
தருமபுரி பேருந்து நிலையம் சென்ற அவர்கள் காரிமங்கலத்தை சேர்ந்த சசிக்குமாரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். சசிக்குமாரை விஜய் ராமசாமி ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். இவா்கள் ரயில் பாதையில் அதியமான்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளனா். அங்கே அவரை தாக்கி லேப்டாப் தாக்கி லேப்டாப்.மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துள்ளனர். அப்போது மயக்கமடைந்த சசிக்குமாரை, மூவரும் சேர்ந்து தூக்கி கொண்டு போய் ரயில் தண்டவாளத்தில் வைத்து விட்டு ரயில் வரும் வரை காத்திருந்துள்ளனர். தொடர்ந்து ரயில் கடந்து சென்ற பின்னர் சசிக்குமார் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு லேப்டாப், மொபைல் போன் ஆகிய பொருட்களை திருடிக் கொண்டு 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த தகவல்களை போலீஸாரின் விசாரணையின் போது விஜய் ராமசாமி கூறியதை தொடர்ந்து அவரையும், சசிகுமார்(இண்டூர்), கார்த்திக் ஆகியோரையும் கைது செய்த ரயில்வே போலீஸார் தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.