ETV Bharat / state

அமமுக, அதிமுகவினருக்கு வலைவிரிக்கும் முன்னாள் அமைச்சர்

author img

By

Published : Jul 16, 2021, 6:43 PM IST

அமமுக, அதிமுகவினருக்கு வலைவிரிக்கும் முன்னாள் அமைச்சர்
அமமுக, அதிமுகவினருக்கு வலைவிரிக்கும் முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தனது ஆதரவாளர்களைச் சந்தித்துவருகிறார்.

அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் அமமுகவினா், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் அதிருப்தியாளர்கள் அக்கட்சிகளிலிருந்து விலகி பழனியப்பன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துவருகின்றனர்.

தொடர்ந்து பழனியப்பன் மாவட்டம் முழுவதும் சென்று தனது ஆதரவாளர்களைத் திரட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தர்மபுரியில் மிகப்பெரிய இணைப்பு விழாவிற்கு ஏற்பாடுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.