ETV Bharat / state

ராமநாதபுரத்தில் மோடி போட்டியா? - பதிலடி கொடுத்த திமுக எம்.பி.

author img

By

Published : Jan 3, 2023, 10:55 PM IST

Etv Bharat
Etv Bharat

'தருமபுரியில் பிரதமர் மோடியை போட்டியிட சொல்லுங்க, அவரை திமுக வேட்பாளர் தோற்கடிப்பார்' எனவும்; 'மாநிலத் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்' எனவும் தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில் குமார் விமர்சித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மோடி போட்டியா? - பதிலடி கொடுத்த திமுக எம்.பி.

தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் இன்று (ஜன.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தருமபுரியில் திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையாக உள்ளது. ஊடகத்தில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தேர்ந்தெடுத்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை வைத்து தோற்கடிக்க முடியும். இல்லையென்றால், பாஜக கட்சிக்கு தருமபுரி தொகுதி ஒதுக்குங்கள்; மிக சுலபமாக திராவிட முன்னேற்றக் கழக கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெறுவார்.

தருமபுரியில் பிரதமர் வேட்பாளாராக மோடி?: என்னுடைய பலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான். அண்ணாமலை மாநிலத் தலைவர் தானே அவர் வரட்டும்; டெபாசிட் இழப்பார். தருமபுரியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அவரை தோற்கடிப்பார். பிரதமர் வேட்பாளரை தோற்கடித்த பெருமையை பெற்றுத் தருவோம்’ என்றார்.

சூடம் ஏற்றினால் தருமபுரி எம்.பி. வந்து விடுவார் என அண்ணாமலை பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, 'வீட்டில் சூடம் ஏற்றுபவர்களை பற்றி நான் பேசவில்லை. மதச்சார்பற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் மதச்சார்பற்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது அண்ணா முதன்முறையாக ஆட்சி அமைந்தபோது, செயல்படுத்திய அரசாணை. நான் கொள்கை பிடிப்பில் வலுவாக இருக்கிறேன்.

அண்ணாமலைப் போல, கர்நாடகாவில் வேலை செய்யும்போது, நான் பெருமைக்குரிய 'கன்னடன்' என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து வேறொன்று பேசுவது போல எனக்கு கிடையாது. வாழ்க்கையில் நான் பிடிப்புடன் இருக்கிறேன். மதச்சார்பற்ற அரசு, மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் சூடம் ஏற்றும்போது, நான் அங்கு செல்லவில்லை.

ரூ.1928 கோடி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்: சாலையில் ஒரு மதத்தை கொண்டு வரும்போது தான், அந்த ஆட்சேபனை தெரிவித்தேன். ஒகேனக்கல் உபநீர் திட்டத்தை பற்றி பொதுக்கூட்டம் போட்டுவிட்டு, அதைப் பற்றி அண்ணாமலை எதுவும் பேசவில்லை. அந்த திட்டம் தவறு என்று உரைத்திருக்கிறார்.

ஆனால், ஒகேனக்கல் முதல் அலகு குடிநீர் திட்டம் ரூ.1928 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன் அதிமுக ஆட்சி இருந்ததால், திட்டம் முழுமை பெறாமல் ஒரு சில கிராமங்களுக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளது.

ரூ.7,980 கோடியில் இரண்டாம் அலகு: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் இரண்டாம் அலகு மதிப்பீட்டை அண்ணாமலை தவறாக சொல்லி இருந்தார். நான்காயிரம் கோடி ரூபாய் என்று சொல்லி இருந்தார். கூட்டுக் குடிநீர் திட்டம் இரண்டாம் அலகு 2054ஆம் ஆண்டு வரை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருக்கக்கூடிய சிப்காட் மற்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.7,980 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயலாக்கத்திற்கு வரவுள்ளது.

இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தருமபுரியில் தொடங்குவதற்கான முழு பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஆண்டுகளில் திட்டத்தை கொண்டு வருவோம்’ என்றார்.

அப்போது, பாஜக தலைவர் அண்ணாமலை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பூஜ்யம் தொகுதியில் தான் வெற்றி பெறும் என்று சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த தருமபுரி எம்.பி., 'தருமபுரி நகராட்சியில் 14 வார்டுகளில் பாஜக போட்டியிட்டது. 14 வார்டுகளிலும் டெபாசிட் இழந்தார்கள். 352 வாக்குகள் வாங்கி உள்ளார்கள். அண்ணாமலை பதவியேற்ற பிறகு தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சித் தேர்தலில் 59 இடங்களில் போட்டியிட்டது. 59-ல் டெபாசிட் இழந்துள்ளனர். அவர்கள் வாங்கிய மொத்த ஓட்டு 1082' என்றார்.

இதையும் படிங்க: 'வாய்ப்பில்ல ராஜா, கையில தான் காசு' - பொங்கல் பரிசுத்தொகை குறித்து அமைச்சர் பெரியகருப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.