ETV Bharat / state

வரதட்சணை கொடுமையில் பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 15, 2019, 9:11 AM IST

தருமபுரி: வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்னை, கணவர் குடும்பத்தினர் கொலை செய்ததாகக் கூறி பெண் வீட்டார் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

வரதட்சணை கொடுமையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வேடிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகள் லலிதா(28) இவருக்கும் பாப்பாரப்பட்டி அடுத்த கானபட்டி சின்னன் மகன் சுப்பிரமணிக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு சௌந்தர்யா என்ற ஆறு வயது மகளும், பிரசாந்த் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர்.

in dharmapuri 28-year-old-woman died in dowry issue
சுப்பிரமணி

பைனான்ஸ் தொழில் செய்து வரும் சுப்பிரமணி, அவர் பெற்றோருடன் சேர்ந்து லலிதாவை வரதட்சணை கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. லலிதாவின் பெற்றோர் சுப்பிரமணியம் கேட்டதிற்கும் அதிகமாகவே பணம், நகைகளை கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக பெங்களூருவில் உள்ள லலிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நேரில் வந்து லலிதாவைப் பார்த்தபோது அவர் உடலில் பல இடங்களில் காயம் இருந்திருக்கிறது.

அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, இவர்கள்தான் லலிதாவை கொலை செய்துள்ளனர் என்று கருதி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் லலிதா பெற்றோர் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகார் அளித்தும் சுப்பிரமணி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவலர்கள் மெத்தனம் காட்டி வந்துள்ளனர், இதனால் மருத்துவனையில் லலிதாவின் உடலை வாங்காமல் அவர் குடும்பத்தினர் காவலர்களை முற்றிகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதன் பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

வரதட்சணை கொடுமையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!
Intro:TN_DPI_01_14_DOWRY DEATH _VIS_BYTE_72044444


Body:TN_DPI_01_14_DOWRY DEATH _VIS_BYTE_72044444


Conclusion:

தருமபுரி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்னை கணவர் குடும்பத்தினர் கொலை செய்ததாக உறவினர்கள் புகார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வேடிக்கொட்டாய் பகுதியை சேர்ந்த  வடிவேல் என்பவரின் மகள் லலிதா வயது 28 இவருக்கும்.  பாப்பாரப்பட்டி அடுத்த கானபட்டி  சின்னன் மகன் சுப்பிரமணிக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சௌந்தர்யா என்ற 6 வயது மகளும் பிரசாந்த் என்ற 3 வயது மகனும் உள்ளனர். லலிதாவின் கணவர் சுப்பிரமணி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுப்பிரமணி மற்றும் அவரது பெற்றோர் லலிதாவை வரதட்சணை கொடுமை செய்ததாகவும் அடிக்கடி பணம் நகைகளை கேட்டு துன்புறுத்தி தங்கள் வீட்டிற்கு அனுப்பியதாகவும் லலிதாவின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.லலிதாவின் பெற்றோர் சுப்பிரமணியம் கேட்ட பணம் நகைகளை பலமுறை கொடுத்ததாகவும் இந்நிலையில் நேற்று லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக பெங்களூருவில் உள்ள தங்களுக்கு தகவல் கிடைத்தது.என்றும் அங்கிருந்து வந்து பார்த்தபோது லலிதாவின் உடலில் பல இடங்களில் காயம் இருக்கிறது.எனவே அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து  லலிதாவின் பெற்றோர் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே சுப்பிரமணி மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் எடுக்காமல் போலீசார் மெத்தனம் காட்டுவதாக லலிதாவின் உறவினர்கள் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசாரை முற்றுகையிட்டனர். பின்பு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லலிதாவின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நடந்து சென்று மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் லலிதா நேற்று மாலை 4 .30மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும் நாங்கள் நேரில் சென்று பார்த்த போது உடலில் பல பகுதியில்  வெட்டு காயம் மற்றும் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது  தெரிய வந்துள்ளது. இந்த கொலையில் மருமகன் சுப்பிரமணி அவரது பெற்றோர் கூட்டாக கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் விசாரணையில் லலிதாவை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகின்றனர் முறையாக விசாரணை செய்து சந்தேகம் மரணத்தை கொலை வழக்காக மாற்றி சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு கொலை நடந்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.