ETV Bharat / state

தர்மபுரியில் திமுக அமோக வெற்றி!

author img

By

Published : Feb 22, 2022, 7:17 PM IST

தர்மபுரியில் திமுக அமோக வெற்றி
தர்மபுரியில் திமுக அமோக வெற்றி

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி மற்றும் ஒன்பது பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் பத்து பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (பிப்.22) தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன.

தர்மபுரி நகராட்சி 33 வார்டுகளில் 18 வார்டுகளில் திமுகவும், 13 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஒரு வார்டில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனா். 18 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக தர்மபுரி நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

மாரண்டஅள்ளி பேரூராட்சி 15 வார்டுகளில் 11 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று அப்பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தர்மபுரியில் திமுக அமோக வெற்றி

காரிமங்கலம் பேரூராட்சி - 15 வார்டுகள்

  • திமுக - 10
  • அதிமுக - 3
  • பாமக - 1
  • சுயேச்சை- 1

கடத்தூர் பேரூராட்சி - 15 வார்டுகள்

  • திமுக - 10
  • அதிமுக - 2
  • பாமக - 1
  • விசிக- 2

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி - 15 வார்டுகள்

  • திமுக - 11
  • விசிக - 1
  • காங்கிரஸ் - 1
  • சுயேச்சை- 2

கம்பைநல்லூர் பேரூராட்சி - 15 வார்டுகள்

  • திமுக - 8
  • அதிமுக - 2
  • பாமக - 4
  • சுயேச்சை- 1

பாப்பாரப்பட்டி பேரூராட்சி - 15 வார்டுகள்

  • திமுக - 11
  • அதிமுக - 1
  • சுயேச்சை - 2
  • சிபிஐ - 1
  • பாலக்கோடு பேரூராட்சி - 18 வார்டுகள்
  • திமுக - 15
  • அதிமுக - 2
  • சுயேச்சை - 1

பொ. மல்லாபுரம் பேரூராட்சி - 15 வார்டுகள்

  • திமுக - 10
  • பாமக - 3
  • விசிக - 2

பென்னாகரம் பேரூராட்சி - 18 வார்டுகள்

  • திமுக - 10
  • பாமக - 2
  • விசிக - 1
  • அதிமுக - 2
  • தேமுதிக - 2
  • சுயேச்சை - 1

அரூா் பேரூராட்சி - 18 வார்டுகள்

  • திமுக - 7
  • அதிமுக - 7
  • சுயேச்சை - 2
  • பாமக - 2

அரூா் பேரூராட்சி சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் வெற்றி இழுபறியில் உள்ளன.

இதையும் படிங்க: வெற்றிகண்டு கர்வம் கொள்ளவில்லை - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.