ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
Updated on: Jun 7, 2022, 1:21 PM IST

ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
Updated on: Jun 7, 2022, 1:21 PM IST
ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை விதித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று (ஜூன்7) முதல் அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக இருந்தது இன்று (ஜூன் 7) காலை நிலவரப்படி நீர் வரத்து 22,000 கன அடியாக அதிகரித்தது.
இதனிடையே, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகவும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை விதித்துள்ளார். கோடை விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் தடையின் காரணமாக ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: Special: தமிழ்நாட்டின் முதல் சொகுசு கப்பல் சுற்றுலா குறித்த செய்தி தொகுப்பு
