ETV Bharat / state

கார்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர்!

author img

By

Published : May 14, 2020, 8:01 AM IST

வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்
வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்

தருமபுரி: நகரப் பகுதியில் தடையை மீறி நிறுத்தப்பட்டிருந்த கார்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கின் காரணமாக, பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியது.

இதனடிப்படையில், தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள கடைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் சுழற்சி முறையில் அனுமதி அளித்துள்ளது.

தருமபுரி நகரப் பகுதிக்குள் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் வருவதைத் தவிர்க்க 8 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி நகரப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நாள்களைத் தவிர, மற்ற நாட்களில் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விதிமுறையை மீறி கடைகளைத் திறந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் கடைகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் கடைக்காரர்களை, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், கடைகளில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட 16 வகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது .

வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர்
காரைப் பறிமுதல் செய்யும் காவல்துறையினர்

நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பொருள்களை வாங்க மூன்று விதமான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இளஞ்சிவப்பு அட்டை வைத்துள்ள நபர்கள் திங்கள், வியாழக்கிழமைகளிலும், நீல நிற அட்டை உள்ளவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், மஞ்சள் நிற அட்டை வைத்திருப்பவர்கள் புதன், சனிக் கிழமைகளிலும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வெளியில் வந்து வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தருமபுரி நகரப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங்களில் கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்தாமல் பலா் வள்ளலார் திடல் அருகே சாலையில் நிறுத்திவிட்டு பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்க சென்றனா். காவல்துறையினர் எச்சரித்தும் வாகன உரிமையாளா்கள் வராததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனா்.

இதையும் பார்க்க: ராஜ்பவனில் கரோனாவா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.