ETV Bharat / state

கரோனாவால் இறந்தவர்கள் உடல்களுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்!

author img

By

Published : Apr 22, 2021, 1:54 PM IST

கரோனாவால் இறந்தவர்கள் உடல்களுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்
கரோனாவால் இறந்தவர்கள் உடல்களுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்

யெலஹங்காவில் உள்ள மின்மயானத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலம் தகனம் செய்யப்படாமல் ஆம்புலன்ஸ்களில் காத்திருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதிலும் சுமார் 149 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கரோனாவால் இறந்தவர்கள் உடல்களுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்

இந்நிலையில் யெலஹங்காவில் உள்ள மின்மயானம் முன் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்களில் இருந்தபடி நீண்ட நேரமாக தகனம் செய்வதற்கு காத்திருந்தன.

இந்த தகவல் அறிந்த கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணனா, பெங்களூரில் உள்ள மேலும் 13 மின் மயானத்தை கரோனாவால் இறந்த உடல்களைத் தகனம் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.