ETV Bharat / state

பாலக்கோடு: திமுக அதிமுகவினர் இடையே மோதல்

author img

By

Published : Dec 21, 2022, 2:23 PM IST

திமுக அதிமுகவினர் இடையே மோதல்
திமுக அதிமுகவினர் இடையே மோதல்

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை தொடங்கி வைப்பதில், திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

திமுக அதிமுகவினர் இடையே மோதல்

தர்மபுரி: பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டிற்கு இரண்டு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரவை பணிகள் இன்று (டிச. 21) தொடங்கப்பட்டன. இதனை வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பதாக அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டது.

பணி நிமித்தமாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தியும் வேறு பணியில் இருந்ததால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. கரும்பு அரவை பணியை யார் தொடக்கி வைப்பது என்பதில், திமுக அதிமுக தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பொழுது திமுகவை சேர்ந்த பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, அது மோதலாக மாறியது.

கடைசியாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பாமக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஒருபுறமும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜ், பாலகோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மறுபுறமும் சேர்ந்துநின்று அரவை பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி, பாதுகாப்பாக சர்க்கரை ஆலையை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் தலைமையிலான மா.செ. கூட்டம் தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.