ETV Bharat / state

தருமபுரியில் போதை விழிப்புணர்வு வீதி நாடகம்!

author img

By

Published : Feb 6, 2019, 7:51 PM IST

தருமபுரி: போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் அரங்கேற்றினர்.

1

போதை பொருட்களால் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மது அருந்துதல், புகைப்பழக்கம் போதை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், குடும்பத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்களின் உடல் நலத்துக்கு எவ்வாறெல்லாம் கேடு ஏற்படுகிறது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை கல்லூரி மாணவ மாணவியர் நடித்துக் காட்டினர். இதனை ஏராளமான பொதுமக்கள், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கண்டு களித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

3
3
Intro:TN_DPI_01_06_ DRAG AWERNESS _VIS_SCRIPT_7204444


Body:TN_DPI_01_06_ DRAG AWERNESS _VIS_SCRIPT_7204444


Conclusion:கல்லூரி மாணவர்கள் தருமபுரி பேருந்து நிலையத்தில் போதை விழிப்புணர்வு..... தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணி துறை மாணவ மாணவியர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். போதை பொருட்களால் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுஅருந்துதல். புகைப்பழக்கம் போதைவஸ்துக்கள் இவற்றைப் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு எவ்வாறெல்லாம் கேடு ஏற்படுகிறது . என்றும் இதனால் மது மற்றும் போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர் குடும்பத்திலுள்ளவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு நாடகங்களை தனியார் கல்லூரி மாணவ மாணவியர் நடித்துக் காட்டினர். இதனை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கண்டு களித்தனர் .இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.