ETV Bharat / state

முள்ளுவாடி ஏரியில் கலக்கும் சாக்கடைக் கழிவுகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

author img

By

Published : Jan 21, 2020, 6:08 PM IST

தருமபுரி: முள்ளுவாடி ஏரியில் சாக்கடைக் கழிவுகள் கலப்பதால் நிலத்தடி நீா் மாசுபடுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முள்ளுவாடி ஏரியில் சாக்கடை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு
முள்ளுவாடி ஏரியில் சாக்கடை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே முள்ளுவாடி ஏரி உள்ளது. பென்னாகரம் பேரூராட்சிக்குள்பட்ட இந்த ஏரியானது 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்த ஏரியில் சுண்ணாம்புக்கார தெரு, கிருஷ்ணாபுரம், வாணியத்தெரு, மணியாக்கார தெரு, கடை வீதி உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த சாக்கடைக் கழிவுகளும் நேரடியாகக் கலக்கின்றன.

முள்ளுவாடி ஏரியில் சாக்கடைக் கழிவுகள் கலப்பதாகக் குற்றச்சாட்டு

மேலும், அழுகிய பழங்கள், நெகிழிப் பொருள்கள், மருத்துவக் கழிவுகள் ஆகியவை ஏரியில் கொட்டப்படுவதால் ஏரிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறுகளில் கழிவுநீர் கலந்ததோடு, சுற்றுவட்டாரப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போது, ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால், ஏரியை தூர்வார வேண்டும் எனவும், ஏரியில் கழிவுநீர் கலப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருவர் உயிரிழப்பு

Intro:பென்னாகரம் அருகே உள்ள முள்ளுவாடி ஏரியில், சாக்கடை கழிவுகள் நேரடியாக நீரில் கலப்பதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, நிலத்தடி நீா் மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.Body:பென்னாகரம் அருகே உள்ள முள்ளுவாடி ஏரியில், சாக்கடை கழிவுகள் நேரடியாக நீரில் கலப்பதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, நிலத்தடி நீா் மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.Conclusion:பென்னாகரம் அருகே உள்ள முள்ளுவாடி ஏரியில், சாக்கடை கழிவுகள் நேரடியாக நீரில் கலப்பதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, நிலத்தடி நீா் மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள முள்ளுவாடி ஏரி பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்டது. 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் சுண்ணாம்புகார தெரு, கிருஷ்ணாபுரம், வாணியத்தெரு, மணியாக்கார தெரு, கடை வீதி, உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த சாக்கடை கழிவுகளும் நேரடியாக ஏரியில் கலக்கிறது. அழுகிய பழங்கள் பிளாஸ்டிக் பொருட்கள், தனியார் மருத்துவமனை மருத்துவ கழிவுகள் அனைத்தும் ஏரியில் கொண்டு வந்து கொட்டப்படுவதால் சுற்றுவட்டார பகுதியில் துர்நாற்றம் வீசி வருபதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். அருகில் உள்ள
விவசாய கிணறுகள் கழிவு நீரால் பாதிப்படைந்து, விளைநிலங்களும் பெருமளவில் பாதிப்படைகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது, ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால், அங்கு நிறைந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, ஏரியை தூர்வாரி சாக்கடை கழிவுகள் தண்ணீரில் ஏரியில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.