ETV Bharat / state

சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பாக அவதூறு பரப்பிய வழக்கு - எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜர்!

author img

By

Published : Aug 9, 2023, 1:33 PM IST

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா (SG Surya) சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பான அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநில செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜ
சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பான அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக மாநில செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

கடலூர்: சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்று. இந்த கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடைமை ஆக்க வேண்டும் என பொதுமக்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

அவ்வப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனக சபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு இடையூறாக இருக்கும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெற்றது.

அப்போது கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் பதாகை ஒன்றை வைத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள், உடனடியாக அந்த பதாகையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் தீட்சிசதர்கள் நான்கு நாட்கள் திருவிழா முடிந்த பிறகு கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்திருந்தனர்.

இதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டதாகவும், அவரது பூநூல் அறுக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இது குறித்து கடந்த ஜூன் 29ஆம் தேதி சிதம்பரம் கிராம நிர்வாக அதிகாரி ஷேக்சிராஜுதீன் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த தகவலை பதிவிட்டது, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கௌஷிக் சுப்பிரமணியன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கெளசிக் சுப்பிரமணியன் இருவரும் இன்று (ஆகஸ்ட் 9) சிதம்பரம் நீதிமன்றத்திற்கு வந்தனர். பின்னர் சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம் 2 நீதிமன்றத்தில் நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜராகினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: Keeladi Excavation: சுடுமண் பாம்பு உருவம் - கீழடியில் அடுத்த ஆச்சரியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.