ETV Bharat / state

புவனகிரி அருகே விவசாயிகள் கொலை: ராணுவ வீரர்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

author img

By

Published : Jan 18, 2021, 11:33 PM IST

ராணுவ வீரர்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை
ராணுவ வீரர்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

புவனகிரி அருகே இரண்டு விவசாயிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த ஆழிச்சகுடி கிராமத்தில் கலியமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், பன்னீர்செல்வம், அன்பழகன், ராகவன், நடராஜன் ஒரு தரப்பாகவும் இருந்துள்ளனர். உறவினர்களான இவர்கள் அனைவரும் முன் விரோதம் காரணமாக கோவில் திருவிழா உட்பட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் எதிர் எதிராக இருந்து வந்து உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு கலியமூர்த்தி, ரவிச்சந்திரன் இருவரும் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் இறந்து கிடந்துள்ளனர். அந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புவனகிரி காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பெயரில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இறந்து போன கலியமூர்த்தியின் மகன் சாரங்கபாணி, 2007ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய தந்தை கொலை செய்யப்பட்டு இறந்துள்ளதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

வழக்கின் விசாரணையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களான பன்னீர்செல்வம், நடராஜன் அவருடைய உறவினர்களான அன்பழகன், ராகவன் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்த கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இரண்டு விவசாயிகள் கொலை வழக்கில், ராணுவ வீரர்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி வங்கி ஊழியர் உள்பட இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.