ETV Bharat / state

சிதம்பர சர்ச்சை - தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றம்

author img

By

Published : Jun 26, 2023, 6:28 PM IST

Updated : Jun 26, 2023, 7:07 PM IST

Etv Bharat
Etv Bharat

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக தீட்ச்சதர்கள் வைத்த பதாகையை காவல் துறை உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் நேற்று (ஜூன் 25) தேர் திருவிழாவும் இன்று (ஜூன் 26) ஆனி திருமஞ்சன திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை கனகசபை படி அருகில் சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சர்கள் ஒரு அறிவிப்பு பலகையை வைத்திருந்தனர்.

அதில், "செவ்வாய்க்கிழமை வரை நான்கு தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை” என எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்நிலையில் சிதம்பரம் தில்லைக்காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமாருடன் கோயிலுக்குள் சென்றனர்.

கோயிலுக்குள் கனக சபை அருகே சென்ற செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் அங்கிருந்த பக்தர்கள் கனக சபை மேல் ஏறக்கூடாது என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கூறி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் அரசாணையை மீறி கனக சபை மீது ஏறக்கூடாது என பதாகை வைக்கக் கூடாது. இதை உடனடியாக அகற்றுங்கள் என கூறினார். ஆனால் தீட்சிதர்கள் பதாகையை அகற்றாமல் காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதாகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்று (ஜூன் 26) பிற்பகல் அனைத்தும் ஆனி திருமஞ்சனம் முடிந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் நடராஜர் ஆலயத்தில் திடீரென குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, கனக சபை அருகே வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற வேண்டும் என தீர்த்தர்களிடம் தெரிவித்தும் அவர்கள் யாரும் அங்கு வராததால் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் அறநிலைத்துறை பணியாளர்கள் காவல் துறை உதவியுடன் கனக சபை அருகே வைக்கப்பட்டு இருந்த பதாகையை அகற்றினர். இதனால், பெரும் பரபரப்பான சுழல் காணப்பட்டது

இதையும் படிங்க: கூடுதல் விலைக்கு மதுவிற்பனையா? உடனடி தீர்வு பணியிடைநீக்கம் தான்! அமைச்சர் அதிரடி

Last Updated :Jun 26, 2023, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.