ETV Bharat / state

இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தியவர் கைது!

author img

By

Published : Oct 23, 2019, 11:06 AM IST

கோவை: தன்னுடன் பணிபுரியும் இளம் பெண்ணை காதலிக்க வற்புறுத்தி, தாக்கிய இளைஞரை சரவணம்பட்டி காவலர்கள் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

youth arrested

கோவை அருகே உள்ள சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் ஊழியராகப் பணியாற்றிவந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார்.

ரஞ்சித் அந்த இளம் பெண்ணை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அந்தப்பெண் காதலை ஏற்க மறுத்து அவரை கண்டித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் கடந்த 20ஆம் தேதி சரவணம்பட்டி ரமணீஸ் மூன்றாவது வீதி அருகே அந்த இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது, ரஞ்சித் அப்பெண்ணை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ரஞ்சித் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகாத வார்த்தையில் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவலர்கள் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெற்றோரை கவனிக்காத வாரிசுகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை!

Intro:
கோவை அருகே, இளம் பெண்ணை தாக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். Body:கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள கீரணத்தம் பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஊழியராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த ரஞ்சித்(24) என்பவரும் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடன் அந்த 23 வயது இளம் பெண் நட்பாக பழகினார். ஆனால், ரஞ்சித் அந்த பெண்ணை காதலித்து வந்தார். இதை அந்த பெண் கண்டித்துள்ளார்.

கடந்த 20-ம் தேதி சரவணம்பட்டி ரமணீஸ் 3-வது வீதி அருகே அந்த இளம் பெண் வந்த போது, ரஞ்சித் அந்த இளம் பெண்ணை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார். இது தொடர்பாக அந்த இளம் பெண் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் கொலை மிரட்டல், பெண் வன் கொடுமை தடுப்பு சட்டம், தகாத வார்த்தையில் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.