இந்த வருட யோகா தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது - ஜக்கி வாசுதேவ்

author img

By

Published : Jun 20, 2021, 10:10 PM IST

சத்குரு ஜக்கிவாசு தேவ் வாழ்த்து

யோகா தினத்தை ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி, ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு என்பது வெளியில் இருந்து வருவது அல்ல, அது நமக்குள் இருந்து வர வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: நாளை(ஜூன் 20) உலக யோக தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜக்கி வாசுதேவ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், உலகத்தில் யோகாவை ஒரு மதமாகவோ, நம்பிக்கை முறையாகவோ, தத்துவமாகவோ இல்லாமல் உள்நிலை நல்வாழ்வுக்கான ஒரு விஞ்ஞானமாக ஏற்றுக் கொண்டு இன்றோடு 7 வருடங்கள் ஆகிறது.

யோகா ஒரு சாத்தியம்

யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. இது ஒரு அற்புதமான சாத்தியம். யோகா என்ற வார்த்தைக்கு சங்கமம் என்று பொருள். அதாவது, நம் தனித்தன்மையின் எல்லைகளை தொடர்ந்து அழித்து, இந்த கணத்தில் இங்கே மிகச் சிறிய உயிராக இருந்து கொண்டே முழு பிரபஞ்சத்தின் அழியா தன்மையை உணர்கின்ற திறமையை அடைய வழிவக்கும் சாத்தியம் யோகா. நமக்கு எப்படி வெளிப்புற நலனுக்காக ஒரு விஞ்ஞானம் இருக்கிறதோ அது போலவே உள்நிலை நலனுக்காக ஒரு விஞ்ஞானம் இருக்கிறது, அதை தான் நாம் யோகா என்கிறோம்.

முக்கியமான யோகா தினம்

இந்த வருட உலக யோகா தினம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் இந்த வருடம் கோவிட் -19 பெருந்தொற்று நம் தலைமுறையின் வாழ்க்கையை எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் தலை கீழாக புரட்டி போட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவிலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் இரண்டு அலைகளை பார்த்து விட்டோம். நாம் எதிர்பார்த்ததை விடவும் இது நீண்ட காலம் தொடர வாய்ப்பு இருப்பதாக வைராலாஜி நிபுணர்கள் சொல்கிறார்கள். அதனால் நல்ல எதிர்பாற்றல் கொண்ட உடலையும், துடிப்பும் சமநிலையும் கொண்ட மனதையும் நாம் உருவாக்கி கொள்வது மிகவும் முக்கியமானதாகும். அப்போது தான், இந்த கடுமையான காலத்தை குறைந்தபட்ச சங்கடங்களோட நம்மால் கடந்து செல்ல முடியும். ஆரோக்கியம் மற்றும் உடல்-மன நலன்கள், நமக்குள் இருந்து தான் வர முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது மருத்துவரிடம் இருந்தோ, மருத்துவத்துறை நிபுணர்களிடம் இருந்தோ பெறக் கூடியது அல்ல.

இணையம் வழி பயிற்சி

ஈஷாவின் மூலம் நாம் இந்த பெருந்தொற்று சூழ்நிலையை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய, சமநிலையான மனதும், உயிரோட்டமான உடலும் தரக்கூடிய மிக எளிமையான பயிற்சிகளை இணையத்தில் இவசமாக வழங்கி உள்ளோம். இந்த உலக யோகா தினத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் யோகாவின் சில அம்சங்களையாவது கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோவையில் கோயில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.