மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த கும்பல் - போலீஸ் விசாரணை

மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த கும்பல் - போலீஸ் விசாரணை
கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு கொலை செய்து கொள்ளையடித்துச் சென்ற கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர்: சூலூர் அருகே பள்ளபாளையம் காந்திநகரில் மளிகை கடை வைத்திருப்பவர் செல்வி. இவரது கடையின் அருகே சரோஜினி (82) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று (ஆக. 05) மதியம் 12 மணி ஆகியும் மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வராததால் செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது மூதாட்டி கை, கால் டேப் மூலம் ஒட்டப்பட்ட நிலையில் கட்டில் அருகே கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வி உடனடியாக கூச்சலிட்டவாறு வெளியே வந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மூதாட்டி இறந்து கிடந்தது தெரியவந்தது.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.
சிலர் மூதாட்டியை கட்டிப் போட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மணல் கடத்தலுக்கு லஞ்சம் ; வீடியோ எடுத்த கடத்தல்காரர்களின் மண்டை உடைப்பு
