ETV Bharat / state

பட்டீஸ்வரர் கோயில் யானைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்!

author img

By

Published : Oct 14, 2020, 6:53 PM IST

கோவை: பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணியின் 29ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

கல்யாணி யானை
கல்யாணி யானை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான கல்யாணி யானையின் 29ஆவது பிறந்தநாள் விழாவனது இன்று (அக்.14) சிறப்பாக நடைபெற்றது. இந்த யானை 1991ஆம் ஆண்டு முதுமலை முகாமில் பிறந்தது. பின்னர் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாலரை வயது இருக்கும்போது இது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கல்யாணி யானை

தொடர்ந்து 25 ஆண்டுகளாக இந்த யானையானது சிறப்பு பூஜைகள் மற்றும் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா, திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று 29ஆவது பிறந்தநாள் காணும் கல்யாணி யானைக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் நெற்றிப் பட்டம் சூட்டி திருக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு, தீபாராதனை தீபவழிபாடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கோயில் வழியாக வீதி உலா வந்தது. இதனை பக்தர்கள் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க: உதகை மான் பூங்காவை நிரந்தரமாக மூட முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.