ETV Bharat / state

ஆழியாறு அணை அருகே தேங்கியுள்ள கழிவுகள் - நோய் தொற்றும் அபாயம்

author img

By

Published : Nov 7, 2019, 8:55 AM IST

கோவை: ஆழியார் அணையில் உள்ள பூங்காவின் அருகே தேங்கியுள்ள கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேங்கியுள்ள கழிவுகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணை சுற்றுலா தலங்களில் மிகவும் பிரபலமானது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்துசெல்கின்றனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் அணையின் பின் பகுதிக்கு அத்துமீறி சென்று மது அருந்திவிட்டு பாட்டில்களை அணையில் வீசி செல்கின்றனர்.

இதனால் அணையில் அசுத்தம் ஏற்பட்டு அணைக்கு நீர் அருந்த வரும் விலங்குகளுக்கு ஆபத்தாக அமைகிறது. அதேபோல் பூங்காவின் சாலையோரம் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் சாப்பாடு தட்டு, மதுபாட்டில்களை போட்டுச் செல்வதால், கழிவுபோல தேங்கி தூர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆழியாறு அணை அருகே தேங்கியுள்ள கழிவுகள்

இதையும் படிங்க:'பரம்பிக்குளம் ஆழியாறு திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்' - துணை சபாநாயகர் ஜெயராமன்!

Intro:dam


Body:dam


Conclusion:பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் சுகதார சீர்கேடு, பூங்காவின் சாலையோரம் உள்ள கழிவுகளால் நோய் பரவும் அபாயம் .பொள்ளச்சி - 6 பொள்ளாச்சி ஆழியார் அணை சுற்றுலா தலங்களில் மிகவும் பிரபலமானது, இங்கு தமிழகம் மட்டும் அல்லாது பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். வரும் சுற்றுலா பயணிகள் அணையின் பின் பகுதிக்கு அத்துமீறி சென்று மது அருந்தி பாட்டிகளை அணையில் வீசி செல்கின்றனர், இதனால் அணையில் அசுத்தம் ஏற்ப்பட்டு அணைக்கு நீர் அருந்தவரும் விலங்குகளுக்கு ஆபத்தாக அமைகிறது. மேலும் அணையின் நீர்னாது கோவை மற்றும்பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் குடீநீர்ருக்கு பயன்படுத்துகின்றனர், பூங்காவின் சாலையோரம் சுற்றுலா பயணிகள் சாப்பாடு தட்டு, மதுபாட்டிகள், கழிவுகள் உள்ளததால் இங்கு மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.